தெலுங்கு படம்
2009ம் ஆண்டு வெளியான யோகி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் யோகி பாபு. அதனைத்தொடர்ந்து காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா ஆகிய படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளார். ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்த ‘லவ் டுடே’ படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில், யோகி பாபு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் நகைச்சுவை வேடத்தில் யோகி பாபு நடிப்பதாக கூறப்படுகிறது.

