ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று மோதவுள்ளது. எம்.எஸ்.தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
குவாஹாட்டியிலுள்ள பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு இது முதல் ஆட்டமாக அமையவுள்ளது. கடந்த சீசனில் போதுமான செயல்திறனை வெளிப்படுத்தாத நிலையில் இந்த ஆண்டில் புதிய வீரர்களுடன் மிகுந்த பலத்துடன் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி.

