Editor's Picksஇந்தியாகல்விசமூகம்

மணிப்பூரைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தனது தங்கையை வகுப்பில் பராமரிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்: இணையத்தில் வைரல்

வைரலான புகைப்படத்தை மணிப்பூரின் மின்சாரம் மற்றும் வனத்துறை அமைச்சர் பிஸ்வஜித் தோங்கம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

“விவசாய வேலைக்கு பெற்றோர் வெளியே சென்றிருக்க தனது தங்கையை மைனிங்சின்லியு பமேய் என்ற 10 வயது சிறுமி வகுப்பறைக்கு எடுத்துச் சென்று பராமரிக்கும் இந்த புகைப்படத்தை சக மனிதரிடம் பரிவும் அன்பும் சிறு வயதிலிருந்தே தூண்டப்பட்டால், அந்த அன்பு குழந்தைகளின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும் என்பதற்கு ஒரு சான்று” என்று அமைச்சர் பெருமிதத்தோடு தனது ட்விட்டரில் வெளியிட்டார்.

இந்த புகைப்படம் வெளியான சிறிது நேரத்திலே வைரலானது. புகைப்படத்தில் அந்த சிறுமியின்சகோதரி அவள் கைகளில் தூங்கும் போது மெயின்சிங்சின்லியு அவளது வகுப்பில் கவனம் செலுத்துகிறார். அமைச்சர் பிஸ்வஜித் தொங்கம் சிறுமியின் அர்ப்பணிப்பைக் கண்டு நெகிழ்ந்து இந்த புகைப்படத்தை அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

”கல்வியில் அவளின் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது! மணிப்பூரின் தமெங்லாங்கைச் சேர்ந்த மைனிங்சின்லியு பமேய் என்ற இந்த 10 வயது சிறுமி, அவளது பெற்றோர் விவசாயத்திற்க்காக வெளியூர் சென்றிருந்ததால், தனது தங்கையை மடியில் வைத்துக்கொண்டு,பள்ளியில் படிக்கிறாள்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related posts