Editor's Picksஇந்தியாஉலகம்சமூகம்வணிகம்

ட்விட்டர் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க். என்னென்ன மாற்றம் வரப்போகுதோ?

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலோன் மஸ்க் இந்த வார தொடக்கத்தில் ட்விட்டரில் 9.2% பங்குகளை வாங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த பங்குகள் $3 பில்லியன் மதிப்புடையவை. இப்பங்குகள் அவரை ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக மாற்றுயுள்ளது.

எலான் மஸ்க், ​​பயனர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் இந்த செயலியில் பல மாற்றங்களைக் கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உங்களுக்கு ட்விட்டரில் ஒரு ‘திருத்து’ (எடிட்) பொத்தான் கிடைத்தால் எப்படி இருக்கும் என வினவியுள்ளார்.

எலோன் மஸ்க் ட்விட்டரில் எடிட் பட்டனைக் கொண்டு வர முடியும், ஆனால் மக்கள் அதை விரும்பவில்லை
என்பது மஸ்க் நடத்திய இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. நான்கு பயனர்களில் ஒருவர் இன்னமும் பிரபலமான ட்விட்டர் தளத்தில் எடிட் பட்டனை விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், மஸ்க்கின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார், “இந்த வாக்கெடுப்பின் விளைவுகள் முக்கியமானதாக இருக்கும். கவனமாக வாக்களியுங்கள்” என்றும் கூறியிருந்தார்.

ஏப்ரல் 1 அன்று எடிட் பட்டன் குறித்த பணிகள் நடப்பதாக ட்விட்டரே அறிவித்தது, முட்டாள் தின வேலையாக இருக்கும் என மக்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவிலை.

சில சூழல்களுக்கு, மைக்ரோ-பிளாக்கிங் பிளாட்ஃபார்மில் பல ஆண்டுகளாக எடிட் பட்டன் மிகவும் கோரப்பட்ட அம்சமாக உள்ளது. ட்விட்டர், உலகெங்கிலும் உள்ள பல பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிற செல்வாக்கு மிக்கவர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு தளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts