தேனியைச் சேர்ந்த 23 வயது இளைஞர், சமூக வலைதளங்களில் காதலித்த பெண்ணின் வெளிப்படையான பாலியல் வீடியோக்களை பதிவேற்றம் செய்ததற்காக கோவை மாவட்டம் போலீஸாரால் ஏப்ரல் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அளித்த புகாரின் பேரில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த பி.கோபிநாதன் (23) கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து சைபர் கிரைம் காவல் நிலைய அதிகாரிகள் கூறியதாவது: புகார்தாரரும், குற்றம் சாட்டப்பட்டவரும் கோவையில் உள்ள ஒரே கல்லூரியில் படித்ததாகவும், அவர்களுக்குள் உறவு இருந்ததும் தெரியவந்துள்ளது.
பட்டப்படிப்பை முடித்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் வேலையில்லாமல் இருக்கவே தன் ஊரான தேனிக்கே சென்றுவிட்டார்.
தூரத்தில் உறவை தொடர்வதில் சிக்கல் ஏற்படவே அவர்களுக்கு இடையே முறிவு ஏற்பட்டது, மேலும் அந்த பெண் குற்றம் சாட்டப்பட்டவருடன் பேசவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் அவர்கள் உறவில் இருந்தபோது அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த தருணங்களை வீடியோவாக படம்பிடித்துள்ளார். அவர் அவற்றை இன்ஸ்டாகிராம் மற்றும் சில சமூக ஊடக தளங்களில் தனது நண்பர்களிடையே பரப்பியுள்ளார்”.
தேனியை சேர்ந்த கோபிநாதனை போலீசார் ஏப்ரல் 1ம் தேதி கைது செய்தனர்.கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.