தீபாவளிக்கு மழை வருமா என்பதை 5 நாட்களுக்கு முன்பு மட்டுமே உறுதியாக சொல்ல முடியும்.
எனவே அக்டோபர் 20, 2025 அன்று மழை வருமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக கன மழை பெய்யும் எனவும் தென் மாவட்டங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் எனவும் அதில் சொல்லப்பட்டிருந்தது.
குறிப்பாக மழை பெய்தால் பட்டாசுகளில் முதலீடு செய்துள்ள வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு தீபாவளியின் போது கடுமையான மழை பெய்தது.
இதனால் பல இடங்களில் தீபாவளி கொண்டாட்டம் கடுமையாக பாதித்தது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் சூழல் நிலவுகிறது.
இருப்பினும் வட மாவட்டங்களில் மட்டுமே வடகிழக்கு பருவமழையால் மழை இருக்கும் எனவும், தென் மாவட்டங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.
இதனை தமிழ்நாடு வெதர்மேனும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

