தமிழகத்தில் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் தேர்தலையொட்டி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பள்ளிக்கல்வித்துறை உள்ளது.
நல்வாய்ப்பாக 11ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் தேர்வு தேதிகளை குழப்பமின்றி முடிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும்போது 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை நவம்பர் 4ம் தேதி வெளியிடப்படும் என்றார்.
இதுகுறித்து நவம்பர் 4ம் தேதி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேதிதகள் முடிவு செய்யப்பட்டு பின்னர் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

