Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, August 3
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»‘‘ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் கே.என்.நேருவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’ – விஜய்

‘‘ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் கே.என்.நேருவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’ – விஜய்

February 20, 20262 Mins Read52 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

‘‘திமுக அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’ என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கபட நாடகத் திமுக அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.

2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் திமுக அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது. நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க :  'முகக்கவசம் கட்டாயம்’ - எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி !

ஊழல் மலிந்த மு.க.ஸ்டாலின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத திமுக அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் திமுக அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க :  6 வயது சிறுமியை கரும்பால் அடித்தே கொன்ற தாய் ! திருவண்ணாமலை நடந்த கொடூரம் !

தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் “திமுக அமைச்சர் கே.என்.நேரு மீதான 1,020 கோடி ரூபாய் ஊழல் புகார் குறித்து, உடனடியாக வழக்குப் பதிவு செய்ய தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையடி உத்தரவு பிறப்பித்திருப்பது, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் பெரும் நம்பிக்கையைத் தருகிறது.

ஆதாரங்கள் கையில் இருந்தும் கூட, எந்தத் தவறுமே செய்யாதது போல முதல்வர் ஸ்டாலின் நடித்துக் கொண்டிருந்தார். இனி திமுகவின் ஊழல் அமைச்சர்கள் யாரும் நீதியின் முன் தப்பிக்க முடியாது! “ஊழல் எஜமான்கள் நிறைந்த கட்சி திமுக” என்பது மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதமாகியுள்ளது.

இந்த வெற்று விளம்பர ‘மாடல்’ திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படுவதற்கும், ஊழல் திமுக அமைச்சர்கள் அனைவரும் சிறைக்குச் செல்வதற்கும் காலம் கனிந்துவிட்டது முதல்வர் அவர்களே!” என்று பதிவிட்டுள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“இந்தியா, பாகிஸ்தானுக்கு 200% வரி விதிப்பேன் என கூறி போரை நிறுத்தினேன்” – ட்ரம்ப் புதிய ‘தகவல்’
Next Article தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்கக் கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,830 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,131 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,013 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,830 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,131 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,013 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.