தங்கம் விலை கடந்த 23-ந்தேதி வரை உயர்ந்து வந்தது. அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120 என்ற வரலாறு காணாத உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் விலை சற்று குறைந்திருந்தது. கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை சரிந்து இருந்தது.
அதன்படி நேற்றுமுன்தினம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 80-க்கும் விற்பனையானது.
விலை உயர்ந்து, தற்போது குறைந்து வருவது இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 400-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளநிலையில், வெள்ளி விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.153-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

