Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»திருச்செந்தூர் முருகன் கோயில் இரவு நேரத்தில் கடற்கரையில் தங்க அனுமதி இல்லை – கோயில் நிர்வாகம்

திருச்செந்தூர் முருகன் கோயில் இரவு நேரத்தில் கடற்கரையில் தங்க அனுமதி இல்லை – கோயில் நிர்வாகம்

November 8, 20252 Mins Read356 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

முருகன் சூரபத்மனை வதம் செய்த இடம் தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற இடம் அறுபடை வீடுகளில் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் கடற்கரை சார்ந்த தலம் என பல சிறப்புகளை திருச்செந்தூர் பெற்றுள்ளது.

இந்த முருகன் கோவிலுக்கு தினசரி உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தங்கி சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

இதனிடையே ஜோதிடர் ஒருவர் சொன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் இரவில் திருச்செந்தூர் கடற்கரையில் நிலவொளியில் தங்கி மறுநாள் அதிகாலை புனித நீராடி சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க :  18 அடியில் நித்தியானந்தாவுக்கு பிரம்மாண்ட சிலை அமைத்த சீடர் !

இதனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கால் வைக்க கூட இடமில்லாத அளவுக்கு கடற்கரையில் மக்கள் திரண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீப காலமாக கோவில் முன்பு தங்கும் பக்தர்களிடம் அதிக அளவில் திருட்டு நடைபெறுவதும் பொருட்கள் காணாமல் போவதும் போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

எனவே பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கோவில் நிர்வாகம் நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதன்படி இன்று முதல் கடற்கரை பகுதியில் யாரும் இரவு நேரங்களில் தங்க அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து கோவில் கடற்கரை பகுதியில் தரிசனத்திற்காக குடும்பத்துடன் தங்கி இருக்கும் பக்தர்களை திருக்கோவில் பணியாளர்கள், காவல்துறையினர்கள் கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் ஆகியோர், அப்புறப்படுத்தினர்.

இதையும் படிக்க :  திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா யாக சாலை பூஜையுடன் தொடங்கியது

இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கோவில் முன்புள்ள கடற்கரையில் தங்க அனுமதி இல்லை என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி திருக்கோவில் முன்புள்ள கடற்கரை பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அய்யா கோவில் வரை உள்ள கடற்கரை பகுதியில் பக்தர்கள் யாரும் இல்லாதவாறு கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தற்பொழுது அவர்களுக்கு அறிவுரை வழங்கி கோவில் வளாகங்களில் மற்றும் அங்குள்ள மண்டபங்களில் தங்கிக் கொள்ளுமாறும் கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

Arupadi veedu murugan temple Night Stay Tiruchendhur
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆபரேஷன் பிம்பிள் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது
Next Article இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.