Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, November 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»71-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்

71-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்

September 24, 20252 Mins Read23 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் 71-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான `தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொர் ஆண்டும் மத்திய அரசால் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்,ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறுபிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கான் (ஜவான்), விக்ராந்த் மாஸே (12த் ஃபெயில்) ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல, சிறந்த நடிகை ராணி முகர்ஜி (மிசஸ் சட்டர்ஜி வெர்சஸ் நார்வே), துணை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்), துணை நடிகை ஊர்வசி (உள்ளொழுக்கு), இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (வாத்தி), திரைக்கதை ஆசிரியர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்) உள்பட பல்வேறு பிரிவுகளில் பலருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இதையும் படிக்க :  அமீர்கான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் !

சிறந்த தமிழ்ப் படமாக ‘பார்க்கிங்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

இந்திய திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக வழங்கப்படும் `தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று நடைபெற்றது. இதில், தேசிய விருதுஅறிவிக்கப்பட்ட திரைக் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

அதன்படி, சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான், விக்ராந்த் மாஸே இருவரும் பெற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், ஷாருக்கான் முதல்முறையாக தேசிய விருது பெறுவது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகை விருதை ராணி முகர்ஜி பெற்றார். சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ்.பாஸ்கர், திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை, ‘பார்க்கிங்’ தயாரிப்பாளர் கே.எஸ்.சினிஷ் ‘வாத்தி’ படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் பெற்றனர்.

இதையும் படிக்க :  மோகன்லால் வீட்டில் யானை தந்தம் வைத்துக்கொள்ள கேரள அரசு வழங்கிய உரிமம் ரத்து

இதேபோல, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைக் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து,`தாதா சாகேப் பால்கே’ விருது மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. விருது பெற்றபின் பேசிய அவர், “இந்த தருணம் எனக்கு மட்டுமே சொந்தமானதல்ல.மலையாள திரைப்படக் குடும்பத்துக்கே சொந்தமானது.

இந்த விருதை, எங்கள் துறையின் பாரம்பரியம், படைப்பாற்றலுக்கான கூட்டு மரியாதையாகப் பார்க்கிறேன். மலையாள சினிமாவை கலைநோக்கோடும், கற்பனையோடும் உருவாக்கியவர்களின் சார்பாக இவ்விருதை ஏற்கிறேன்.

என் கனவுகளிலும் கூட இந்த தருணத்தைக் கற்பனை செய்ததில்லை. அதனால் இது ஒரு கனவு நனவானதல்ல. அதைவிட மிகப் பெரியது. மலையாளத் திரைத் துறைக்கும், கேரள பார்வையாளர்களுக்கும் இவ்விருதை நான் அர்ப் பணிக்கிறேன்.

சினிமா என் ஆன்மாவின் இதயத் துடிப்பு. மத்திய அரசுக்கு நன்றி” என்றார். விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Dadasaheb Phalke Award mohanlal MS Bhasker Ranimugarjee sharukan
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமோடியின் தீபாவளி பரிசு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி
Next Article இதை செய்தால்தான் அமெரிக்க அதிபர் நோபல் பரிசு வெல்ல முடியும் – பிரான்ஸ் அதிபர்

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,111 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,319 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,235 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,111 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,319 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,235 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.