Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, August 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»T20 WC 2026: பாகிஸ்தானின் சுழல் ஆயுதம் இந்தியாவிடம் எடுபடுமா? – கொழும்பு நகரில் இன்று பலப்பரீட்சை

T20 WC 2026: பாகிஸ்தானின் சுழல் ஆயுதம் இந்தியாவிடம் எடுபடுமா? – கொழும்பு நகரில் இன்று பலப்பரீட்சை

February 15, 20265 Mins Read16 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் கொழும்பு ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் இன்று ‘ஏ’ பிரி​வில் நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி, 2009-ம் ஆண்டு சாம்​பிய​னான பாகிஸ்​தானுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. இந்த ஆட்​டம் இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது.

இந்த போட்டி பல்​வேறு கட்ட சிக்​கல்​களுக்கு பின்​னர் நடை​பெற உள்​ளது. பாகிஸ்​தான் அணி முதலில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக விளை​யாட மறுப்பு தெரி​வித்​தது. அந்த அணி வங்​கதேச அணி டி 20 உலகக் கோப்பை தொடரில் நீக்​கப்​பட்​டதற்கு ஆதரவு தெரி​வித்து இந்​தி​யா​வுக்கு எதி​ரான போட்​டியை புறக்​கணிப்​ப​தாக தெரி​வித்​தது.

இதன் பின்​னர் ஐசிசி, பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத்​துடன் பல்​வேறு கட்ட பேச்​சு​வார்த்​தைகளை நடத்​தி​யது. தொடர்ந்து நட்பு நாடு​களான வங்​கதேசம், இலங்​கை, ஐக்​கிய அரபு அமீரக கிரிக்​கெட் வாரி​யங்​களும் கோரிக்கை வைத்​ததை தொடர்ந்து பாகிஸ்​தான் அணி, இந்​திய அணிக்கு எதி​ரான ஆட்​டத்தை புறக்​கணிக்​கும் முடிவை வாபஸ் பெற்​றது.

இதைத் தொடர்ந்தே இரு அணி​களும் இன்று இலங்​கை​யின் கொழும்பு நகரில் உள்ள பிரேம​தாசா மைதானத்​தில் மோத உள்​ளன. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி முதல் ஆட்​டத்​தில் அமெரிக்​காவை 29 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும், 2-வது ஆட்​டத்​தில் நமீபி​யாவை 93 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும் தோற்​கடித்து இருந்​தது.

இந்​திய அணி​யில் தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கு​வது உறுதி செய்​யப்​பட​வில்​லை. உடல் நலக்​குறைவு காரண​மாக அவர், நமீபியா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் களமிறங்​க​வில்​லை. ஒரு​வேளை அவர், உடற்​கு​தியை பெற்று களமிறங்​கும் பட்​சத்​தில் சஞ்சு சாம்​சன் வெளியே அமர​வைக்​கப்​படு​வர்.

போட்டி நடை​பெறும் பிரேம​தாசா ஆடு​களம் முற்​றி​லும் சுழற்​பந்து வீச்சுக்கு சாதக​மானது என்​ப​தால் இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி கூடு​தலாக ஒரு சுழற்​பந்து வீச்​சாள​ருடன் களமிறங்​கக்​கூடும். இது நிகழ்ந்​தால் அர்​ஷ்தீப் சிங் அல்​லது ரிங்கு சிங் நீக்​கப்​பட்டு அவருக்கு பதிலாக குல்​தீப் யாதவ் சேர்க்​கப்​படக்​கூடும். குல்​தீப் யாதவ், துபா​யில் நடை​பெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணிக்கு எதி​ராக 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தார். இது ஒரு​புறம் இருக்க ஆல்​ர​வுண்​டான வாஷிங்​டன் சுந்​தர் முழு உடற்​தகு​தியை எட்டி உள்​ளார்.

இந்​திய அணி​யில் தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கு​வது உறுதி செய்​யப்​பட​வில்​லை. உடல் நலக்​குறைவு காரண​மாக அவர், நமீபியா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் களமிறங்​க​வில்​லை. ஒரு​வேளை அவர், உடற்​கு​தியை பெற்று களமிறங்​கும் பட்​சத்​தில் சஞ்சு சாம்​சன் வெளியே அமர​வைக்​கப்​படு​வர்.

போட்டி நடை​பெறும் பிரேம​தாசா ஆடு​களம் முற்​றி​லும் சுழற்​பந்து வீச்சுக்கு சாதக​மானது என்​ப​தால் இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி கூடு​தலாக ஒரு சுழற்​பந்து வீச்​சாள​ருடன் களமிறங்​கக்​கூடும். இது நிகழ்ந்​தால் அர்​ஷ்தீப் சிங் அல்​லது ரிங்கு சிங் நீக்​கப்​பட்டு அவருக்கு பதிலாக குல்​தீப் யாதவ் சேர்க்​கப்​படக்​கூடும். குல்​தீப் யாதவ், துபா​யில் நடை​பெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணிக்கு எதி​ராக 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தார். இது ஒரு​புறம் இருக்க ஆல்​ர​வுண்​டான வாஷிங்​டன் சுந்​தர் முழு உடற்​தகு​தியை எட்டி உள்​ளார்.

இதையும் படிக்க :  அலைச்சறுக்கு போட்டியில் அசத்தும் தமிழ்நாடு பெண்கள் !

இந்​திய அணி​யின் பேட்​டிங்கை பொறுத்​தவரை​யில் நடப்பு தொடரில் கொத்​தாக விக்​கெட்​களை பறி​கொடுப்​பது வாடிக்​கை​யாகி உள்​ளது. மும்​பை​யில் நடை​பெற்ற அமெரிக்க அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் தொடக்க கட்​டத்​தில் 77 ரன்​களுக்கு 6 விக்​கெட்​களை இந்​திய அணி பறி​கொடுத்​திருந்​தது.

அதேவேளை​யில் நமீபியா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இறு​திக்​கட்ட ஓவர்​களில் இந்​திய அணி 4 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை தாரை வார்த்து இருந்​தது. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி 200 ரன்​களுக்கு மேல் குவித்​த​தால் விக்​கெட்​கள் சரிவு என்​பது எந்​த​வித பாதிப்​பை​யும் ஏற்​படுத்​த​வில்​லை.

இந்த இரண்டு போட்​டி​யில் மும்​பை​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சூர்​யகு​மார் யாத​வும், டெல்​லி​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இஷான் கிஷன், ஹர்​திக் பாண்​டி​யா​வும் அதிரடி​யாக விளை​யாடி ரன்​கள் குவித்​திருந்​தனர். ஆனால் மற்ற பேட்​ஸ்​மேன்​களிடம் இருந்து பெரிய அளவி​லான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை.

உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்​களில் ஒரு அணி சாதிக்க வேண்​டும் என்​றால் தனிப்​பட்ட வீரர்​களின் திறமையை நம்​பி​யிருப்​பதை விட, கூட்டு முயற்சி தேவை. அதி​லும் பாகிஸ்​தான் போன்ற அணிக்கு எதி​ராக அனைத்து வீரர்​களும் ஒருங்​கிணைந்து செயல்​பட்டு உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​து​வது அவசி​யம். சல்​மான் அலி ஆகா தலை​மையி​லான பாகிஸ்​தான் அணி தனது முதல் ஆட்​டத்​தில் 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் நெதர்​லாந்து அணி​யை​யும், 2-வது ஆட்​டத்​தில் 32 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் அமெரிக்க அணி​யை​யும் வீழ்த்​தி​யிருந்​தது. அந்த அணி இரு ஆட்​டங்​களை​யும் இலங்​கை​யிலேயே விளை​யாடி உள்​ளது. சுமார் 2 வாரங்​களாக அந்த அணி அங்​கேயே தங்​கி​யிருப்​பது சாதக​மான விஷய​மாக பார்க்​கப்​படு​கிறது.

ஆடு​களம் சுழலுக்கு சாதக​மாக இருக்​கும் நிலை​யில் பாகிஸ்​தான் அணி​யில் உஸ்​மான் தாரிக், சைம் அயூப், அப்​ரார் அகமது, ஷதப் கான், முகமது நவாஷ் ஆகிய 5 சுழற்​பந்து வீச்​சாளர்​கள் இடம் பெற்​றுள்​ளனர். இதில் உஸ்​மான் தாரிக் நீண்ட நிறுத்​தம் செய்து பந்​து​வீசும் பாணி விவாத​மாக மாறி உள்​ளது. இதனால் அவரது பந்​து​வீச்சு இந்​திய அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு புதிய அனுபவ​மாக இருக்​கக்​கூடும்.

பாகிஸ்​தான் அணி​யின் பேட்​டிங்​கில் சாஹிப்​சாதா ஃபர்​ஹான். சல்​மான் அலி ஆகா, சைம் அயூப், ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோர் நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வர்​களாக திகழ்​கின்​றனர். இதில் சாஹிப்​சாதா ஃபர்​ஹான், கடந்த ஆண்டு நடை​பெற்ற ஆசிய கோப்பை தொடரில் ஜஸ்​பிரீத் பும்​ரா​வின் பந்​து​வீச்​சில் தொடர்ச்​சி​யாக 2 சிக்​ஸர்​களை அடித்து கவனம் ஈர்த்து இருந்​தார்.

எனினும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்​தான் அணி இது​வரை வலு​வான பந்​து​வீச்சை எதிர்​கொள்​ள​வில்​லை. அந்த அணி தனது முதல் 2 ஆட்​டங்​களி​லும் நெதர்​லாந்​து, அமெரிக்​காவையே எதிர்​கொண்​டிருந்​தது. இந்​திய அணி​யின் பந்​து​வீச்​சில் ஜஸ்​பிரீத் பும்​ரா, வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் பாகிஸ்​தான் அணியின் பேட்​டிங் வரிசைக்கு சவால் கொடுக்​கக்​கூடும்.

இதே​போன்று பாகிஸ்​தான் அணி​யின் சுழற்​பந்து வீச்​சுக்கு எதி​ராக ஹர்​திக் பாண்​டி​யா, ஷிவம் துபே ஆகியோர் சிறப்​பாக மட்​டையை சுழற்​றக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அதேவேளை​யில் இந்​திய அணியின் டாப் ஆர்​டர் பேட்​டிங் வரிசைக்கு இடது கை வேகப்​பந்து வீச்​சாளர்​களான ஷாகின் ஷா அப்​ரிடி, சல்​மான் மிர்ஸா அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

இதையும் படிக்க :  சிஎஸ்கே-வின் ஹாட்ரிக் தோல்வி.. ஜடேஜாவை நம்பும் தல தோனி!

மே.இ.தீவு​கள் மோதல்: முன்​ன​தாக இன்று காலை 11 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள மேற்கு இந்​தி​யத் தீவு​கள் – நேபாளம் அணி​கள் மோதுகின்​றன.

இதைத் தொடர்ந்து பிற்​பகல் 3 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் ‘ஏ’ பிரிவில் உள்ள அமெரிக்கா – நமீபியா அணிகள் மோதுகின்றன.

மழைக்கு வாய்ப்பு: இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் இன்று கொழும்பு நகரில் மோத உள்​ளன. இந்​நிலை​யில் வங்​காள விரி​கு​டா​வில் உரு​வாகும் குறைந்த காற்​றழுத்த தாழ்வு காரண​மாக கொழும்பு நகரில் மாலை​யில் 70 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்​ள​தாக இலங்கை வானிலை ஆய்​வு மையம்​ அறி​வித்​துள்​ளது.

கை குலுக்கல் இருக்குமா? – கடந்த ஆண்டு நடை​பெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது டாஸ் நிகழ்​வில் இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ், பாகிஸ்​தான் கேப்​ட​னுடன் கைகுலுக்​க​வில்​லை. மேலும் போட்டி முடிவடைந்த பின்​னரும் பாகிஸ்​தான் வீரர்​களு​டன் இந்​திய அணி வீரர்​கள் பரஸ்​பரம் கைகுலுக்​கு​வதை தவிர்த்​தனர். இந்த நிலை உலகக் கோப்​பை​யிலும் தொடரக்​கூடும் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​தது.

இதுதொடர்​பாக நேற்று நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்​யகு​மார் யாத​விடம் கேட்​ட​போது, ‘24 மணி நேரம் பொறுத்​திருங்​கள். ஏன் அதில் இவ்​வளவு கவனம் செலுத்த வேண்​டும். நாங்​கள் கிரிக்​கெட் விளை​யாட வந்​துள்​ளோம். மற்ற விஷ​யங்​களை நாளை பார்த்​துக்​கொள்​வோம்” என்​றார்.

இதுகுறித்து பாகிஸ்​தான் அணி​யின் கேப்​டன் சல்​மான் அலி ஆகா கூறும்​போது, “கிரிக்​கெட்டை ஆத்​மார்த்​த​மாக விளை​யாட வேண்​டும். எனது தனிப்​பட்ட கருத்து ஒரு பொருட்​டல்ல. ஆனால் கிரிக்​கெட் எப்​போதும் எப்​படி விளை​யாடப்பட வேண்​டுமோ அப்​படி விளை​யாடப்பட வேண்​டும். என்ன செய்​வது என்​பதை அவர்​கள்​தான் முடிவு செய்ய வேண்​டும்​” என்​றார்​.

தியேட்டர்களில் கிரிக்கெட் போட்டி: டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​தி​யா, பாகிஸ்​தான் மோதும் ஆட்​டத்தை டெல்​லி​யிலுள்ள ஓட்​டல்​கள், சினிமா அரங்​கு​கள் நேரடி ஒளிபரப்பு செய்ய தயார் நிலை​யில் உள்​ளன.

டெல்​லி​யில் உள்ள ஓட்​டல்​களில் பெரிய திரைகளைத் தயார் செய்து வாடிக்​கை​யாளர்​கள் பார்ப்​ப​தற்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும், சுவை​யான உணவு வகைகளை​யும் ஹோட்​டல்​கள் அறி​முகம் செய்​துள்​ளன. ஹாட்​ரிக், பியர் பவுண்​டரி, சிக்​ஸர் சேவர், பவுண்​டரி பிஞ்ச் என்ற பெயரில் குளிர்​பானங்​கள் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளன. டெல்​லி​யில் உள்ள பிவிஆர் சினிமா மல்ட்​டிபிளெக்ஸ் தியேட்​டரில் 300 திரைகளில் போட்​டியைக் காண ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஜோதிட நாள்காட்டி 15.02.2026 | மாசி 03
Next Article 160 கி.மீ. வேகத்தில் சிறுவன் ஓட்டிய கார் விபத்து: 7 பேர் உயிரிழப்பு

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,823 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,126 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,823 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,126 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.