இன்றைய தினம் கோவில்பட்டியில், நடைபெற்ற தமிழ்நாடு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.
இந்த நிகழ்வில், மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும், மாநில பொதுச்செயலாளர் திரு. இராம ஸ்ரீநிவாசன் அவர்களும், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்களும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் திரு.செ.ராஜூ அவர்களும் பங்கேற்று உரையாற்றினர்.
இவ்வாறு தனது எக்ஸ் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

