தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 17-ந் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மேலும் அன்றைய தினமே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், தற்போதைய திமுக அரசால், 2026-27-ம் ஆண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய முடியாது. எனவே, இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், சட்டப் பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், வரும் 17 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பாவு கூறினார்.

