Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»2-வது சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்கா போராடி வெற்றி

2-வது சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்கா போராடி வெற்றி

February 12, 20265 Mins Read25 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் டி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதி​ராக தென் ஆப்​பிரிக்க அணி 2-வது சூப்​பர் ஓவரில் போராடி வெற்றி பெற்​றது.

அகம​தா​பாத்​தின் நரேந்​திர மோடி மைதானத்​தில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 187 ரன்கள் குவித்​தது.

தொடக்க வீரரும் கேப்​ட​னுமான எய்​டன் மார்க்​ரம் 5 ரன்களில் ஃபசல்​ஹக் ஃபரூக்கி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதன் பின்​னர் ரியான் ரிக்​கெல்​டன், குயிண்​டன் டி காக்குடன் இணைய பவர்​பிளே​வில் 43 ரன்​கள் சேர்க்கப்பட்டன. இதன் பின்​னர் இந்த ஜோடி ஆப்​கானிஸ்​தான் பந்​து​வீச்சை வெளுத்து வாங்​கியது. இதனால் 10.2 ஓவர்​களில் தென் ஆப்​பிரிக்க அணி 100 ரன்​களை எட்டியது.

குயிண்​டன் டி காக் 34 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்டரி​களு​டன் தனது 19-வது அரை சதத்​தை​யும், ரியான் ரிக்​கெல்​டன் 23 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்டரி​களு​டன் தனது 4-வது அரை சதத்​தை​யும் விளாசினர். இந்த ஜோடி​யின் அதிரடி​யால் தென் ஆப்பிரிக்க அணி 210 முதல் 220 ரன்​கள் வரை குவிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது.

ஆனால் இவர்​கள் இரு​வரை​யும் 13-வது ஓவரை வீசிய ரஷித் கான் ஆட்​ட​மிழக்​கச் செய்​தார். குயிண்​டன் டி காக் 41 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 59 ரன்களும், ரியான் ரிக்​கெல்​டன் 28 பந்​துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்​டரி​களு​டன் 61 ரன்​களும் விளாசிய நிலை​யில் ரஷித் கான் பந்​தில் ஆட்​ட​மிழந்​தனர். இந்த ஜோடி 2-வது விக்​கெட்​டுக்கு 114 ரன்​கள் குவித்​தது.

ரியான் ரிக்​கெல்​டன் ஆட்​ட​மிழந்​த​போது ஸ்கோர் 13 ஓவர்களில் 127 ஆக இருந்​தது. இதன் பின்​னர் தென் ஆப்பிரிக்க அணி​யின் ரன் குவிப்பை வேகம் குறைந்த பந்துகளை வீசி ஆப்​கானிஸ்​தான் அணி​யின் பந்து வீச்சாளர்​கள் வெகு​வாக கட்​டுப்​படுத்​தினர். கடைசி 7 ஓவர்களில் தென் ஆப்​பிரிக்க அணி 60 ரன்​கள் சேர்த்​தது.

டெவால்ட் பிரே​விஸ் 19 பந்​துகளில், 23 ரன்​களும், டேவிட் மில்​லர் 15 பந்​துகளில், 20 ரன்​களும், மார்கோ யான்​சன் 7 பந்​துகளில் 16 ரன்​களும் சேர்த்​தனர். ஆப்​கானிஸ்​தான் அணி சார்​பில் அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் 3 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார். ரஷித் கான் 4 ஓவர்​களை வீசி 28 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 2 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார்.

188 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆப்​கானிஸ்​தான் அணி ஒரு கட்​டத்​தில் 16 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்புக்கு 147 ரன்​கள் குவித்​தது. தனது 13-வது அரை சதத்தை அடித்த ரஹ்மனுல்லா குர்​பாஸ் 42 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 84 ரன்​கள் விளாசிய நிலை​யில் கேசவ் மகா​ராஜ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இப்ராகிம் ஸத்​ரன் 12, குல்​பா​தின் நயீப் 0, செடிகுல்லா அடல் 0, டார்​விஷ் ரசூலி 15, முகமது நபி 5 ரன்​களில் வெளியேறினர்.

அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய், ரஷித் கான் களத்​தில் நின்ற நிலை​யில் கடைசி 4 ஓவர்​களில் வெற்​றிக்கு 41 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. காகிசோ ரபாடா வீசிய 17-வது ஓவரில் ரஷித் கான் 2 பவுண்​டரி​களை விரட்ட இந்த ஓவரில் 11 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. இதனால் 18 பந்​துகளில் 30 ரன்கள் தேவை என்ற நிலை உரு​வானது.

இதையும் படிக்க :  வாய்ப்புகளை தவறவிடும் மயங்க் அகர்வால் ; ஆகாஷ் சோப்ரா வார்னிங்!

இந்த சூழ்​நிலை​யில் 18-வது ஓவரை வீசிய லுங்கி நிகிடி, அஸ்​மதுல்லா ஓமர்​ஸாயை (22) அவுட்​டாக்கி திருப்​பு​முனையை ஏற்​படுத்​தி​னார். அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய்லாங் ஆன் திசை​யில் சிக்​ஸரை நோக்கி அடித்த பந்தை எல்லைக்​கோட்​டுக்கு அரு​கில் வைத்து டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் கேட்ச் செய்​தார். ஆனால் அவர், நிலை தடு​மாறி கோட்டுக்கு வெளியே ஒரு காலை வைக்க நேரிட்ட போது பந்தை மைதானத்​துக்​குள் சற்று உயர​மாக வீசி​விட்டு மீண்​டும் உள்ளே வந்து பிடித்து அசத்​தி​னார்.

இந்த ஓவரில் நிகிடி 6 ரன்​களை மட்​டுமே வழங்கி ஆப்கானிஸ்​தான் அணி​யின் நெருக்​கடியை அதிரிகரித்தார். அடுத்த ஓவரை வீசிய மார்கோ யான்​சன், ரஷித் கானை (20) ஆட்​ட​மிழக்​கச் செய்​தார். இதையடுத்து களமிறங்​கிய நூர் அகமது 4-வது பந்​தில் சிக்​ஸர் அடித்​தார். ஆனால் கடைசி பந்​தில் முஜீப் உர் ரஹ்​மான் (0) ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்​டத்தில் பரபரப்பு அதி​க​மானது.

கைவசம் ஒரு விக்​கெட் மட்​டுமே இருக்க ரபாடா வீசிய கடைசி ஓவரில் வெற்​றிக்கு 13 ரன்​கள் தேவைப்பட்டன.முதல் பந்தை ரபாடா நோபாலாக வீசினார். இதற்கு மாற்​றாக வீசப்​பட்ட அடுத்த பந்து வைடானது. இதனால் ப்ரீஹிட் தொடர்ந்​தது. ஆனால் நூர் அகமது அடித்த பந்தை லாங் ஆஃப் திசை​யில் யான்​சன் தவற​விட்​டார்.

எனினும் ரன் ஓடப்​பட​வில்​லை. 2-வது பந்தை டீப் பேக்​வேர்டு ஸ்கொயர் திசை​யில் நூர் அகமது சிக்​ஸருக்கு பறக்க​விட்​டார். இதனால் 4 பந்​துகளில் 5 ரன்​களே தேவையாக இருந்​த​தால் ஆப்​கானிஸ்​தான் அணி எளி​தாக வெற்றி பெறும் என எதிர்​பார்​கப்​பட்​டது. 3-வது பந்​தில் ரன் ஏதும் சேர்க்​கப்​பட​வில்​லை. 4-வது பந்​தில் நூர் அகமது 2 ரன்கள் சேர்த்​தார். ஆனால் இதை ரபாடா நோபாலாக வீசியிருந்தார்.

இதனால் ஆப்​கானிஸ்​தானுக்கு கூடு​தலாக ஒரு ரன் கிடைத்​தது. 3 பந்​துகளில் 2 ரன்​கள் தேவை என்ற நிலையில் 4-வது பந்​தில் நூர் அகமது 2 ரன்​கள் ஓட முயன்றார். அப்​போது மறு​முனை​யில் இருந்த ஃபசல்​ஹக் ஃபரூக்கி (0) நூலிழை​யில் ரன் அவுட் ஆனார். 19.4 ஓவர்களில் ஆப்​கானிஸ்​தான் அணி 187 ரன்​களுக்கு ஆட்டமிழந்த​தால் போட்டி ‘டை’ ஆனது. நூர் அகமது 15 ரன்​கள் சேர்த்திருந்​தார்.

ஃபசல்​ஹக் ஃபரூக்கி 2-வது ரன்​னுக்கு விரை​வாகவோ ஓடியிருந்​தாலோ அல்​லது டைவ் அடித்து கிரீஸை தொட்டிருந்​தாலோ ரன் அவுட் ஆவதில் இருந்து தப்பித்திருக்க முடி​யும். அவரது மட்டை கீரிஸை தொடாமல் காற்​றில் இருந்​த​தால் ஆட்​ட​மிழக்க நேரிட்​டது. 2 பந்​துகள் மீதம் இருந்த நிலை​யிலும் ஆப்​கானிஸ்​தான் அணி வெற்​றிக் கோட்டை கட்ட முடி​யாதது ரசிகர்​களுக்கு ஏமாற்​ற​மாக அமைந்​தது.

இதையடுத்து வெற்​றியை தீர்​மானிக்க சூப்​பர் ஓவர் கடைபிடிக்​கப்​பட்​டது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்​தான் அணி 17 ரன்​கள் சேர்த்​தது. நிகிடி வீசிய இந்த ஓவரில் அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் 2 பவுண்​டரிகள், ஒரு சிக்​ஸர் விளாசி​னார். இதையடுத்து 18 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற நிலை​யில் தென் ஆப்​பிரிக்கா விளையாடியது. டேவிட் மில்​லர், டெவால்ட் பிரே​விஸ் களமிறங்கினார்.

இதையும் படிக்க :  சாஹிப்​சாதா ஃபர்​ஹான் சதம் விளாசல்: சூப்​பர் 8 சுற்​றில் நுழைந்தது பாகிஸ்தான்

ஃபசல்​ஹக் ஃபரூக்கி வீசிய முதல் பந்​தில் மில்​லர் ஒரு ரன் சேர்த்​தார்.அடுத்த பந்தை சிக்​ஸருக்கு விளாசிய பிரெ​விஸ் 3-வது பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 4-வது பந்​தில் பவுண்​டரி அடித்​தார். 5-வது பந்தை வீணடித்​தார். கடைசி பந்​தில் 7 ரன் தேவை என்ற நிலை​யில் ஃபுல்​டாஸாக வீசப்​பட்ட பந்தை ஸ்டப்ஸ்லாங் ஆஃப் திசை​யில் சிக்​ஸர் விளாச தென் ஆப்பிரிக்க அணி 17 ரன்​களு​டன் சூப்​பர் ஓவரை முடிக்க ஆட்​டம் மீண்​டும் டை ஆனது.

இதையடுத்து 2-வது சூப்​பர் ஓவர் நடத்​தப்​பட்​டது. இதில் தென் ஆப்​பிரிக்கா முதலில் பேட் செய்​தது. அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் வீசிய ஓவரில் தென் ஆப்​பிரிக்கா 23 ரன்​களை குவித்​தது. ஸ்டப்ஸ் ஒரு சிக்​ஸர் உட்பட 7 ரன்​கள் சேர்க்க டேவிட் மில்​லர் 2 சிக்​ஸர்​கள் உட்பட 16 ரன்​கள் விளாசினார். 24 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற நிலை​யில் ஆப்​கானிஸ்​தான் பேட் செய்​தது.

கேசவ் மகராஜ் வீசிய முதல் பந்தை வீணடித்த முகமது நபி அடுத்த பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்​பாஸ் தொடர்ச்​சி​யாக 3 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டார். கடைசி பந்​தில் 6 ரன் தேவையாக இருந்த நிலை​யில் கேசவ் மகா​ராஜ் வைடாக வீசி​னார். இதனால் 5 ரன் தேவை என்ற சூழ்​நிலை​யும் பவுண்​டரி அடித்​தால் போட்டி மீண்​டும் டை ஆகும் நிலையும் உரு​வானது.

ஆனால் குர்​பாஸ் அடித்த பந்து பாயின்ட் திசை​யில் டேவிட் மில்​லரிடம் கேட்ச் ஆனது. முடி​வில் தென் ஆப்​பிரிக்க அணி வெற்றி பெற்​றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்​தது. இரு வெற்​றிகளின்​ மூலம்​ 4 புள்ளிகளை பெற்​றுள்​ள தென்​ ஆப்​பிரிக்​க அணி தனது பிரிவில்​ 2-வது இடத்​தில்​ உள்​ளது.

2-வது விரைவு அரை சதம்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மனுமல்லா குர்பாஸ் 26 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் அவர், டி 20 உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த 2-வது ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த வகையில் கடந்த 2014-ம் ஆண்டு தொடரில் ஹாங் காங் அணிக்கு எதிராக ஷஃபிகுல்லா ஷின்வாரி 24 பந்துகளில் அரை சதம் கடந்திருந்தார்.

குயிண்டன் டி காக் ‘737’

டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் குயிண்டன் டி காக் 59 ரன்கள் விளாசினார். இதுவரை அவர், டி 20 உலகக் கோப்பை தொடரில் 737 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் டி வில்லியர்ஸ் 717 ரன்கள் குவித்திருந்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபுற்றுநோயால் தவித்த மனைவி… கணவர் விபரீத முடிவு
Next Article இங்கிலாந்தை ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள்: சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரம்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.