சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்து வந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. நேற்று நடைபெற்ற கொலிஜியம் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவாவின் பதவிக் காலம் மார்ச் 5-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள, புதிய தலைமை நீதிபதி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கொலிஜியத்தின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும், அரவிந்த் தர்மதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முறைப்படி பொறுப்பேற்று கொள்வார்.

