Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»புதிய டிஜிபி நியமன வழக்கு – தமிழ்நாடு அரசுக்கு 1 வாரம் ‘கெடு’ விதித்த உச்ச நீதிமன்றம்

புதிய டிஜிபி நியமன வழக்கு – தமிழ்நாடு அரசுக்கு 1 வாரம் ‘கெடு’ விதித்த உச்ச நீதிமன்றம்

February 13, 20262 Mins Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

புதிய டிஜிபி நியமனம் குறித்த திருத்தப்பட்ட பரிந்துரையை யுபிஎஸ்சி என அழைக்கப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்திடம் 1 வாரத்திற்குள் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜுவால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி ஓய்வு பெற்றார். அவர் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பே புதிய டிஜிபி நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய டிஜிபியை தமிழ்நாடு அரசு நியமிக்கவில்லை. இதற்கு பதிலாக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார்.

நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாமல், பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்தும், டிஜிபி நியமனத்தில் பின் பற்ற வேண்டிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றவில்லை என்றும் குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும், வழக்கறிஞருமான ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி புதிய டிஜிபி தேர்வு தொடர்பாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. பின்னர், ஹென்றி திபேன் தரப்பில் 2-வது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இதையும் படிக்க :  மதுரையில் திமுகவினர் ரயில் மறியல் போராட்டம் - 5 பேர் கைது !

இந்த நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், ‘டிஜிபியை தேர்வு செய்யும் குழுவில் உள்துறை கூடுதல் செயலாளர் இடம் பெற வேண்டும். வழக்கு விசாரணையை பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்’ என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

ஆனால், வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கும் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. புதிய டிஜிபி நியமனம் குறித்த புதிய பரிந்துரையை யுபிஎஸ்சி-க்கு 1 வாரத்திற்குள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன் பின்னர், அதனை பரிசீலித்து இரண்டு வாரங்களுக்குள் யுபிஎஸ்சி இறுதி பரிந்துரையை வழங்கும் என்று தெரிவித்தனர். இதன் பின்னர், உடனடியாக டிஜிபி நியமனம் செய்யப்பட்ட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தெலங்கானா டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கில், கடந்த 5 ஆம் தேதி வழங்கிய உத்தரவை நீதிபதிகள் இன்று மேற்கோள்காட்டினர். அந்த உத்தரவில், டிஜிபி நியமனம் தொடர்பான முன்மொழிவுகளை அனுப்புவதில் பல மாநிலங்கள் காட்டிய தாமதத்திற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், உரிய நேரத்தில் பரிந்துரைகளை வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட யுபிஎஸ்சிக்கு அதிகாரம் வழங்கியும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.

இதையும் படிக்க :  மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை என புகார் - பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதம்

இந்த நிலையில், தமிழ்நாடு டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கில், ​​பிப்ரவரி 5 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும், யுபிஎஸ்சியும் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

யுபிஎஸ்சி சார்பில் டிஜிபியை தேர்வு செய்யக் கூடிய 5 பேர் இடம் பெறும் குழுவில் தமிழ்நாட்டின் சார்பில் இரண்டு பேர் இருக்க வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் பி. வில்சனின் வாதத்தை ஏற்றுக் கொண்டு இந்த குழுவை திருத்தி அமைக்கவும் யுபிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இது குறித்து வழக்குத் தொடர்ந்த ஹென்றி திபேன் வெளியிட்டுள்ள வீடியோவில், “யுபிஎஸ்சி குழுவில் பொறுப்பு டிஜிபிக்கு பதிலாக தலைமைச் செயலாளர் அல்லது அதற்கு இணையான மூத்த ஐஏஎஸ் அதிகாரி இருக்கலாம் என நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. டிஜிபி பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர் 10 ஆண்டுகள் அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் தமிழகத்திலோ, சிபிஐயிலோ அல்லது வெளிநாட்டிலோ பணியாற்றி இருந்தாலும் சரி ஒரு வாரத்திற்குள் யுபிஎஸ்சிக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த ஆணையை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபிரான்ஸிடம் ரூ.3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!
Next Article கண்மூடித்தனமாக இந்தியை எதிர்க்க வேண்டாம் – தமிழக மாணவர்களிடம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தல்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.