தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அத்துடன் மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனால் தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளது.
கைதான செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
மீனவர்கள் கைதான சம்பவம் நாகப்பட்டினம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

