ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வாரத்தில் ஒருநாள் மட்டும் ரெயில் இயங்கும். செப்டம்பர் 29, அக்டோபர் 06, 13, 20, 27 (திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் மட்டும் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படும். தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு கிளம்பும் இந்த ரெயில், நாகர்கோவிலில் மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்றடையும்.
அதேபோல், நாகர்கோவிலிலிருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படும். செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 26 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்த ரெயில் இயக்கப்படும். நாகர்கோவிலிலிருந்து இரவு 11.15 மணிக்கு கிளம்பும் இந்த ரெயில், தாம்பரத்தில் மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு வந்து சேரும்.
இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தை அடையும்.
மறுமார்க்கத்திலும் இதே வழித்தடத்தில் ரெயில் இயங்கும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் – போத்தனூர் சென்னை சென்டிரல் – போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்கள் (06123/06124) இயக்கப்படுகிறது. சென்னை சென்டிரலில் இருந்து செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழன்) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும்.மறுமார்க்கத்தில், போத்தனூரில் இருந்து செப்டம்பர் 26, அக்டோபர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளி) மாலை 6.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
சென்னை சென்டிரல் – செங்கோட்டை
இதேபோல், சென்னை சென்டிரல் – செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்கள் (06121/06122) இயக்கப்படுகின்றன. சென்னை சென்டிரலில் இருந்து செப்டம்பர் 24, அக்டோபர் 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் (புதன்) மாலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 6.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழன்) இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.
சென்னை எழும்பூர் – திருநெல்வேலி
மேலும், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே சிறப்பு ரெயில் (06070/06069) இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழன்) இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 26, அக்டோபர் 3, 10,17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளி) மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் நள்ளிரவு 1.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
தூத்துக்குடி – சென்னை எழும்பூர்
இதேபோல், தூத்துக்குடி – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் (06018/06017) இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்) இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்) மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அன்று இரவு 11.15 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
நாகர்கோவில் – சென்னை சென்டிரல்
மேலும், நாகர்கோவில் – சென்னை சென்டிரல் இடையே சிறப்பு ரெயில் (06054/06053) இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்டிரலில் இருந்து அக்டோபர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் அன்று இரவு 8.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

