கோவையில் 25 தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது . தெரு நாய்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்த மாநகராட்சி திட்டமிடப்பட்டு உள்ளது .
கோயம்புத்தூரில் கடந்த இரண்டரை மாதங்களில் 25 தெரு நாய்களுக்கு ரேபிஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவர்கள் நகரத்தில் உள்ள நாய்களுக்கு ரேபிஸ் நோய் பரவி வருவதாக சந்தேகிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுகின்றனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி உதவி மையத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில், “உடல்நிலை சரியில்லாத மற்றும் ஆக்ரோஷமான” நாய்கள் இருந்த 14 இடங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஜூன் மாதம் முதல் 49 நாய்கள் பிடிக்கப்பட்டன.
அவற்றில் நான்கு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் விடப்பட்டன. மற்ற நாய்கள் சீரானைக்கன்பாளையம் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு மையத்தில் நான்கு முதல் பத்து நாட்களில் இறந்துவிட்டன.
Mission Rabies என்ற NGO அமைப்பைச் சேர்ந்த குழு, 45 நாய்களின் மூளை திசுக்களை எடுத்து பரிசோதனை செய்தது. அதில் 25 நாய்களுக்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதியானது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரேபிஸ் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

