சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான அறிவிப்பை வரும் 8ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் புதிய படம்
மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்திற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவீரன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் அறிவிப்பை கடந்த 29ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த அறிவிப்பு தள்ளி சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் 8ம் தேதி சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின் இணையும் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக சிறப்பு காட்சி ஒன்றை படமாக்கி உள்ளனர். அந்த வீடியோ மூலமாக படத்திற்கான அறிவிப்பை வெளியிடுகின்றனர். இந்தத் திரைப்படம் மண்டேலா வகையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

