தொடர்ந்து முருகப்பெருமானின் வழிபாட்டிற்கு முட்டுக்கட்டை போடும் திமுக அரசு விரட்டியடிக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு வருமாறு:
நாமக்கல் மாவட்டம் இயைமங்கலம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் திமுக அரசின் ஏவல்துறை தடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
போலி மதச்சார்ப்பின்மை பேசும் ஆட்சியில், குன்றத்தில் தீபமேற்றத்தான் அனுமதியில்லையென்றால், கார்த்திகைத் திருநாளில் திருக்கோவிலின் உள்ளே முருகப்பெருமானின் நாமத்தைப் பாராயணம் செய்யவும் உரிமை இல்லையா?
பண்பாட்டு உரிமையைப் பறித்து, பாலமுருகனின் பக்த கோடிகளை முடக்கிவிடலாம் எனத் தப்புக்கணக்கு போடும் பாசிச
அறிவாலயம் அரசின் பசப்பு வேலைகள் இனி எடுபடாது! இந்து விரோத திமுக அரசு மீண்டுமொருமுறை ஆட்சியைப் பிடிக்கும் என்ற பகல் கனவு நிறைவேறாது!
இவ்வாறு நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

