தென் மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களில் 30 படுகொலைகள் நடந்திருப்பதாக கூறி, திமுக அரசு மீது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது-
தாமிரபரணி பகுதிகளைக் கொலைகளின் கூடாரமாக்கிய திமுக அரசு!
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் முப்பது படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக வெளிவந்துள்ள பத்திரிகைச் செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.
தமிழர் நாகரிகத்தின் தொட்டிலான தாமிரபரணி நதிக்கரை பகுதிகளைக் கொடூர கொலைகளின் கூடாரமாக மாற்றியது தான் திமுக அரசின் ஒரே சாதனை! தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சிதைத்து சீரழிய விடும் திமுக அரசை, வரும் தேர்தலில் தயவுதாட்சண்யமின்றி நிராகரிப்பர் தமிழக மக்கள்!
இவ்வாறு அந்தப் பதிவில் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

