இன்றும் தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,900-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.95,200-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையும் நேற்று அதிகரித்திருந்தது. ஆனாலும் கடந்த ஒரு வாரத்துக்கு பிறகு அதன் ஏற்ற வேகம் சற்று குறைந்திருக்கிறது.
கடந்த ஒரு வாரமாக தினமும் கிராமுக்கு ரூ.5-க்கு குறையாமல் விலை ஏற்றம் கண்டது.
ஆனால் நேற்று கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.207-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரம் ரூபாயும் குறைந்து, ஒரு கிராம் ரூ.206-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

