Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»“காங்கிரஸுக்கு திமுக அடிமை…” – திருச்சி மேடையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

“காங்கிரஸுக்கு திமுக அடிமை…” – திருச்சி மேடையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

March 11, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

“ஆட்சியில் பங்கு, கூடுதல் இடம் ஆகியவற்றைக் கேட்டு தினம்தோறும் அறிக்கை வெளியிட்டு, பல்வேறு விமர்சனங்களை செய்து வந்த காங்கிரஸ் கட்சியிடம், கெஞ்சி, அதற்கு அடிமையாகி, அதனுடன் கூட்டணி வைத்திருக்கிறது திமுக” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘இதே திருச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்பு திமுகவின் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியை விமர்சனம் செய்தார். அதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு இணைந்து தமிழகத்தில் அற்புதமான கூட்டணியை அமைத்திருக்கிறது. இது வலிமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி.

பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில், பல்வேறு வார்த்தைப் போர்களுக்கு இடையில்தான் திமுக – காங்கிரஸ் கூட்டணி இப்போது அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 20 நாட்கள் திமுக, காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் நடந்தது.

ஆட்சியில் பங்கு, கூடுதல் இடம் கேட்டு காங்கிரஸ் தினம்தோறும் அறிக்கை வெளியிட்டு, பல்வேறு விமர்சனங்களை செய்து வந்தது. அத்தனையும் தாண்டி கெஞ்சி காங்கிரஸுக்கு அடிமையாகி அக்கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறது திமுக.

ஆனால், அதிமுக – தேசிய ஜனநாயகக் கூட்டணி ஓர் அற்புதமான கூட்டணி. பரஸ்பர உணர்வோடு நாங்கள் இணைந்திருக்கிறோம். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணியின் தலைவர்களும் நிர்வாகிகளும் தொண்டர்களும் எறும்பைப் போல, தேனிக்களைப் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு மீண்டும் தமிழகத்தில் ஓர் அற்புதமான ஆட்சியை அமைப்போம்.

இதையும் படிக்க :  கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கியது உத்தரவு !

மு.க.ஸ்டாலின் இனி எத்தனை இடங்களில் கூட்டம் போட்டாலும் நாட்டு மக்கள் அவரை நம்பப் போவதில்லை. கடந்த 2021-ல் 525 அறிவிப்புகளை வெளியிட்டது திமுக. இதில் 4-ல் ஒரு பங்கு அறிவிப்புகள் கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அத்தனையும் பொய். கவர்ச்சிகரமாகப் பேசி, கவர்ச்சிகரமாக அறிக்கைவிட்டு ஆனால், சொன்ன அறிவிப்புகளை இதுவரை நடைமுறைப்படுத்தாத அரசாங்கம்தான் திமுக அரசாங்கம், திமுக கட்சி.

மக்கள் உங்களை அடையாளம் கண்டுகொண்டுவிட்டார்கள். தேர்தல் வந்தால் திமுகவிடம் இருந்து அறிக்கைகள் வரும். தேர்தல் முடிந்தால் அதோடு விட்டுவிடுவார்கள். அதுதான் திமுகவின் கொள்கை.

ஆனால், எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சி அதிமுக, நிறைவேற்றிய கூட்டணி எங்கள் கூட்டணி. ஏமாற்றி ஆட்சிக்கு வந்து மக்களை வாட்டி வதைக்கிற அரசாக திமுக அரசு உள்ளது.

தமிழ்நாட்டுக்கும் என்டிஏவுக்கும்தான் போட்டி என ஸ்டாலின் கூறி வருகிறார். பாவம், அவருக்கு மறதி. நடக்கப் போவது தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல். தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், யார் வரக் கூடாது என்று மக்கள் முடிவு செய்யக் கூடிய தேர்தல் இந்த தேர்தல். மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதனால்தான், எங்களைப் பற்றி உங்களால் விமர்சனம் செய்ய முடியவில்லை.

இதையும் படிக்க :  தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் !

2011 முதல் 2021 வரை 10 ஆண்டு காலம் அதிமுக அற்புதமான ஆட்சியைக் கொடுத்தது. அது பொற்கால ஆட்சி என்று மக்கள் பாராட்டினார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்குமான அரசாக அதிமுக அரசு திகழ்ந்தது.

தங்கள் கூட்டணியில் உள்ள அனைவருக்கும் ஒரே கொள்கை என்று ஸ்டாலின் அடிக்கடி பேசுகிறார். திமுக கொள்கையும் காங்கிரஸ் கொள்கையும் ஒன்றா? திமுக கொள்கைகளும் கம்யூனிஸ்ட்களின் கொள்கைகளும் ஒன்றா? திமுக கொள்கையும் விசிகவின் கொள்கையும் ஒன்றா? ஒரே கொள்கை என்றால் ஒரே கட்சியாகிவிடலாம். தனித்தனி கட்சி தேவையில்லை.

பல்வேறு கொள்கைகள் உள்ள கட்சிகள் சேர்ந்துதான் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், ஒருமித்த கொள்கை கொண்ட கட்சிகள் எல்லாம் இணைந்துள்ள கூட்டணிதான் திமுக கூட்டணி என ஏமாற்றுகிற கட்சி திமுக. வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக கூட்டணி அமைப்பது இயல்பு.

திமுகவை அகற்ற வேண்டும், தமிழ்நாடு ஏற்றம் பெற வேண்டும், வளம் பெற வேண்டும், கொள்ளையடிக்கிற கூட்டத்தை அடித்து விரட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பிரமாதமான கூட்டணியாக எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஈரானில் பெய்யும் கருப்பு மழையால் சுவாச பிரச்சினைகள் அதிகரிக்கும்: உலக சுகாதார மையம்
Next Article “தொடரும் பாலியல் வன்கொடுமைகள்… முதல்வர் ஸ்டாலினின் செவிகளுக்கு எட்டுகிறதா?” – நயினார் நாகேந்திரன்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.