மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரத்தி, ஆலப்பாக்கம், திட்டலாம் மற்றும் மேலும் பல பகுதிகளில் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையான அரசு திட்டத்தின் கீழ் வீடு வழங்குதல், குடிநீர் தேக்க தொட்டி அமைத்தல், இருளர் குடியிருப்பு பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சுடுகாட்டு சாலை மற்றும் சுற்றுசுவர் அமைப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அதனை தொடர்ந்து இன்று 07.11.2025 மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

