திருமதி விஜயா சதீஷ் அவர்கள் தயாரிக்கும் இந்தப்படம் “மனிதன் தெய்வமாகலாம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட ரசிகர்களுக்காக தயாராகி வரும் வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை இன்று நடிகர் தனுஷ் அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், திருமதி விஜயா சதீஷ் அவர்கள் தயாரிக்கும் இந்தப்படம் “மனிதன் தெய்வமாகலாம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது.
இதுவே படத்திற்கான அற்புதமான தலைப்பை உருவாக்கியது. இந்தப்படத்தில் இயக்குநர் – நடிகர் செல்வராகவன் முன்னணியில் நடிக்கிறார். அவருக்கு இணையாக குஷி ரவி, Y.G.மகேந்திரன், Mime கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, N.ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

