Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»வட கொரியா ஏவுகணை சோதனை எதிரொலி: அவசர கூட்டத்தை கூட்டிய ஜப்பான் பிரதமர்

வட கொரியா ஏவுகணை சோதனை எதிரொலி: அவசர கூட்டத்தை கூட்டிய ஜப்பான் பிரதமர்

March 14, 20262 Mins Read4 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வட கொரியா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை குறித்து ஜப்பான் பிரதமர் அலுவலகம் சந்தேகம் எழுப்பியுள்ளது. இதன் எதிரொலியாக ஜப்பான் பிரதமர் அலுவலகம் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக தகவல்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப். 28-ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கின. இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு வட கொரியா ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வட கொரியா, அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பான் மீது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது. இது குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் ஜப்பான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘அவசர எச்சரிக்கை. வட கொரியா சந்தேகத்துக்கு உரிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது. கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  “அரசியலமைப்பை பின்பற்றாமல் எனக்கு எதிராக யூனுஸ் சதி செய்தார்” - வங்கதேச அதிபர்

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஏவுகணையின் பாதையை கண்காணிக்க உத்தரவிட்ட ஜப்பான் பிரதமர் சனே டகைச்சி, நெருக்கடி மேலாண்மை மையத்துடன் தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளைக் கொண்ட அவசர கால சிறப்புக் குழுவின் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இது குறித்து ஜப்பான் செய்தி நிறுவனமான என்ஹெச்கே வெளியிட்ட செய்தியில், ‘‘பிற்பகல் 1.30 மணி அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. வட கொரியாவில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை போல தோன்றும் ஒன்று ஏவப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்கு வெளியே உள்ள கடல் பகுதியில் விழுந்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர். பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்கு வெளியே இந்த ஏவுகணை விழுந்ததால் ஆபத்து குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சேதம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. சேதத்தை மதிப்பிடுவதற்கு அதிகாரிகள் விரைவாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கியுள்ள ஆயிரம் பேரையும் மீட்கும் பணியில் மீட்புப்படையினர்

வட கொரியாவின் ஏவுகணைத் தாக்குதலை தென் கொரியா உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவும் தென் கொரியாவும் தங்கள் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், வட கொரியா கிழக்கு நோக்கி அடையாளம் தெரியாத ஒரு ஏவுகணையை ஏவியது என தென் கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் கியோட்டா வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘இந்த சம்பவம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்ததைப் போலவே நடந்துள்ளது. வட கொரியா கடந்த ஜனவரி 27-ம் தேதி ஜப்பான் கடலை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. அவை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்கு வெளியே விழுந்ததாக கண்டறியப்பட்டது’’ என தெரிவித்துள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article​விஜய் பற்​றிய கேள்வி: மௌனமாகச் சென்ற த்ரிஷா
Next Article மானாமதுரை இளைஞர் ஆகாஷ் கொலை வழக்கு: ஆய்வாளர் உள்பட 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.