Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»அமெரிக்கா, இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா, இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழப்பு

March 2, 20262 Mins Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்தனர்.

ஈரானின் ‘ரெட் க்ரெசன்ட் சொசைட்டி’ (Red Crescent Society) திங்கள்கிழமை (மார்ச் 2, 2026) வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்லாமியக் குடியரசான ஈரானை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 555 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 131 நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அணு நிலையங்கள் மீது தாக்குதல்?

ஈரானின் நடன்ஸ் யூரேனியம் செறிவூட்டும் நிலையத்தின் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியதாக ஐ.நா. அணு அமைப்பில் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஐஏயுஏ (International Atomic Energy Agency) அமைப்பில் ஈரானின் தூதராக உள்ள ரெசா நஜாபி (Reza Najafi), “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட சட்டவிரோத மற்றும் கொடூரமான தாக்குதல்களை நான் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரானின் அமைதியான மற்றும் பாதுகாப்பான அணு நிலையங்களை அவர்கள் நேற்றும் தாக்கினர். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்கிறது என்ற அவர்களின் கூற்று மிகப்பெரிய பொய்” என்று தெரிவித்தார். எனினும், அந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இதையும் படிக்க :  Oxford University Launches Covid-19 Vaccine Study on Children

ஐஏஇஏ கூறுவது என்ன?

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் காரணமாக ஈரானின் எந்த ஓர் அணு நிலையமும் சேதமடைந்ததாக தகவல் இல்லை என ஐஏஇஏ (IAEA) அமைப்பின் தலைவர் ரஃபேல் குரோஸி தெரிவித்துள்ளார்.

35 நாடுகள் அடங்கிய நிர்வாக சபையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “எந்த அணு நிலையங்களும் சேதமடைந்ததாக அல்லது தாக்கப்பட்டதாக எங்களிடம் எந்தச் சான்றும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஈரானின் அணு ஒழுங்குமுறை அதிகாரிகளை தொடர்புகொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும், இதுவரை எந்த பதிலும் இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) தலைமையகத்தை அழித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க :  உயர்ந்துகொண்டே செல்லும் தங்கம் விலை குறையுமா?

இது தொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ள அமெரிக்க ராணுவம், “கடந்த 47 ஆண்டு காலத்தில் ஐஆர்ஜிசி சுமார் 1000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை கொன்றுள்ளது. இந்நிலையில், நேற்று அமெரிக்கா மேற்கொண்ட பெரிய அளவிலான தாக்குதலில் பாம்பின் (ஐஆர்ஜிசி) தலை வெட்டப்பட்டது. இதன் மூலம் இனி ஐஆர்ஜிசி-க்கு தலைமையகம் என்பது இருக்காது. பூமியில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவப் படையை அமெரிக்கா கொண்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் தொடரும்” என்று தெரிவித்துள்ளது.

ஐஆர்ஜிசி (IRGC – Islamic Revolutionary Guard Corps) என்பது ஈரான் ராணுவத்தின் சக்தி வாய்ந்த படைப் பிரிவாக இஸ்லாமிய புரட்சிகர காவல் படை ஆகும். கடந்த 1979-ல் இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை காமேனி நிறுவினார். அவரது அறிவுறுத்தலுக்கு இணங்க ஐஆர்ஜிசி செயல்பட்டது நினைவுகூரத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழகத்தில் மார்ச் 5 வரை வறண்ட வானிலை – வெப்பநிலை உயர வாய்ப்பு
Next Article இந்திய அணுமின் உற்பத்திக்கு யுரேனியம் வழங்குகிறது கனடா – ஒப்பந்தம் கையெழுத்து

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.