Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»அமெரிக்க நிலைகளை குறிவைத்து துபாய், கத்தாரில் ஈரான் தாக்குதல்!

அமெரிக்க நிலைகளை குறிவைத்து துபாய், கத்தாரில் ஈரான் தாக்குதல்!

March 4, 20262 Mins Read17 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஈரான் – இஸ்ரேல் மோதல் இன்று 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், துபாய் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்து கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், ‘ஈரானின் இரண்டு ஏவுகணைகள் கத்தாரை நோக்கி ஏவப்பட்டன. அதில் ஒன்றை கத்தார் வான் பாதுகாப்பு அமைப்பு வீழ்த்தியது. மற்றொன்று, அல் உதைத்தில் உள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய விமானப் படை தளத்தைக் குறிவைத்தது. இருப்பினும் இதில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் – அமெரிக்கா தாக்குதல் தொடங்கியதில் இருந்தே, வளைகுடா பகுதியில் உள்ள பல்வேறு அமெரிக்க தளங்களையும் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே குவைத், கத்தார், துபாய், சவூதி அரேபியா, ஏன் ஓமனை கூட விட்டுவைக்காமல் ஈரான் தாக்கியுள்ள நிலையில், கத்தாரில் அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து புதிய தாக்குதலை மேற்கொண்டது கவனம் பெறுகிறது. அதேபோல், செவ்வாய்க்கிழமை மாலை, துபாயில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளானது.

இதையும் படிக்க :  பொருளாதார நெருக்கடியால் இத்தாலி பிரதமர் ராஜினமா !

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், “துபாயில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பார்க்கிங் பகுதியில் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், ஈரானின் பயங்கரவாத அரசால் அமெரிக்க தூதரங்கள் மற்றும் ராஜாங்க ரீதியிலான மற்ற அலுவலகங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது” என்றார்.

இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்

இதனிடையே, லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் ஆதரவுப் படைகளான ஹிஸ்புல்லா படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் விவரித்துள்ளது.

இன்று காலையில் லெபனானின் பல பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்தது. தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடும்படி இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் இந்தத் தாக்குதலை தொடங்கியதில் இருந்தே ஏராளமான அப்பாவி பொதுமக்கள் இறந்துவிட்டதாக, லெபனான் பொதுச் சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க :  இஸ்ரேல் - ஈரான் போரால் டைல்ஸ் உற்பத்தி பாதிப்பு

அதேபோல், ஈரான் தலைநகர் டெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது இஸ்ரேல். இதற்கு இஸ்ரேல் ராணுவம், ‘விரிவான தாக்குதல்’ என்று பெயரிட்டுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே ஈரானில் 2000 இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ‘விரிவான தாக்குதல்’ என்ற பெயரில் ஈரான் நடத்தவுள்ள தாக்குதல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுகிறது.

அதேவேளையில், உள்ளூர் ஊடகத்துக்கு பேட்டியளித்த ஈரான் மூத்த தலைவர் ஒருவர், “இஸ்ரேல் இன்று ஈரானின் பல்வேறு பகுதிகளிலும் லெபனானில் குடியிருப்புப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு அஞ்சி பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை. அமெரிக்கா மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களுடன் சமரசத்துக்கான எந்தவொரு அடித்தளமும் இல்லை. எங்கள் விருப்பப்படி இந்தப் போர் தொடரும்” என்று கூறியுள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவென்றால் பரிசு அளிப்பது இயல்பு… தோற்றால் அபராதம் விதிப்பதா? – பாகிஸ்தான் வாரிய ‘பிளாக் காமெடி’
Next Article ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் வந்தாலும் படுகொலை உறுதி: இஸ்ரேல் எச்சரிக்கை

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.