நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று காலையில் கிராமுக்கு ரூ.60ம், சவரனுக்கு ரூ.480ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.100ம், சவரனுக்கு ரூ.800ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.160ம், பவுனுக்கு ரூ.1,280ம் குறைந்து இருந்தது.
இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.11,550க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.175க்கு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 குறைந்துள்ளது.

