Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, August 3
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»‘இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு’ – மருத்துவக் குழு பரிசோதிக்க பாக். உச்ச நீதிமன்றம் உத்தரவு

‘இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு’ – மருத்துவக் குழு பரிசோதிக்க பாக். உச்ச நீதிமன்றம் உத்தரவு

February 12, 20262 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்மான் கானுக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதுமுதல் அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். தற்போது அவர் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கடந்த மாதம் அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கண் நோய்க்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, சிறையில் அவரைச் சந்தித்து அவரது உடல்நிலை குறித்தும் அவர் எவ்வாறு வாழ்கிறார் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய இம்ரான் கான் தரப்பு வழக்கறிஞர் சல்மான் சஃப்தாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிக்க :  அமெரிக்க அச்சுறுத்தல் எதிரொலி: 37 ஆண்டு கால வழக்கத்தை தவிர்த்த கமேனி!

இதையடுத்து, கடந்த 10-ம் தேதி ராவல்பிண்டி சிறைக்குச் சென்று இம்ரான் கானைச் சந்தித்த சல்மான் சஃப்தார், அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, பாகிஸ்தானின் பிரபல டான் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘தனக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் தற்போது வலது கண்ணில் 15% பார்வை மட்டுமே உள்ளதாக இம்ரான் கான் என்னிடம் கூறினார். மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்பு தனக்கு இரண்டு கண்களிலும் இயல்பாக இருக்கும் 6×6 என்ற அளவில் பார்வை இருந்ததாகவும், அதன் பிறகே தனக்கு பார்வை மங்கத் தொடங்கியதாகவும் இம்ரான் கான் கூறினார். இது குறித்து சிறை அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க :  “அரசியலமைப்பை பின்பற்றாமல் எனக்கு எதிராக யூனுஸ் சதி செய்தார்” - வங்கதேச அதிபர்

இம்ரான் கானுக்கு ரத்த உறைவு இருப்பது கண்டறியப்ட்டுள்ளது. இது கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும். ஊசி உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவருக்கு வலது கண்ணில் 15% பார்வை மட்டுமே உள்ளது. மற்றபடி அவர் நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்’’ என்று வழக்கறிஞர் சல்மான் சஃப்தார் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை அடுத்து, வரும் 16-ம் தேதிக்கு முன்பாக இம்ரான் கானுக்கு விரிவான மருத்துவ பரிசோதனை நடத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், தனது குழந்தைகளுடன் பேச அவர் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘எங்களை ‘கொள்கை எதிரி’ என சொல்லும் முன்பு…’ – விஜய்க்கு தமிழக பாஜக அறிவுரை
Next Article பிரான்ஸிடம் ரூ.3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,832 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,133 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,013 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,832 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,133 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,013 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.