படப்பிடிப்பிற்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, “அடுத்ததாக ராஜ்கமல், ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் ஒரு படம் நடிக்க போகிறேன்.
நானும், கமலும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. அதற்கான இயக்குநர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதற்கான கதை, கதாபாத்திரம் கிடைக்க வேண்டும். கிடைத்தால் நடிப்பேன்” என்றார்.
இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது இயக்குநர் உறுதி செய்யப்படவில்லை என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

