Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»காவல் துறையின் மெத்தனம் ஏற்புடையது அல்ல: தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் ஐகோர்ட் காட்டம்

காவல் துறையின் மெத்தனம் ஏற்புடையது அல்ல: தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் ஐகோர்ட் காட்டம்

March 13, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தென் மாவட்டங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாக உள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரீஸ்வரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: விளாத்திகுளம் குளத்தூர் பகுதியில் மார்ச் 10-ம் தேதி மாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

மாணவி காணாமல் போனது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டபோது பெண் காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார். மாணவியின் பெற்றோரை காவல் ஆய்வாளர் மோசமாக பேசியுள்ளார். சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

புகார் அளித்த உடனே போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவி காப்பாற்றப்பட்டிருக்கலாம். போலீஸாரின் தாமதம் காரணமாக மாணவியின் உயிர் பறிபோயுள்ளது. தற்போது போலீஸார் தங்களின் மெத்தன போக்கை சமாளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கை உள்ளூர் போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, மாணவியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிக்க :  திருவாரூர் மத்திய பல்கலை. விடுதியில் உயிரை மாய்த்த மாணவி - உறவினர்கள் போராட்டம்

இந்த மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு இன்று விசாரித்தது. அரசுத் தரப்பில், ‘விசாரணை சரியான பாதையில் செல்கிறது. குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ எனக் கூறப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், ‘தென் மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் நடைபெறும் இதுபோன்ற குற்ற நிகழ்வுகள் நீதிமன்றத்துக்கும் வருத்தம் அளிக்கின்றன. அதே நேரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுக்கும்போது சரியான குற்றவாளிகளை கைது செய்யவோ, விசாரணையை சரியாக நடத்தவோ முடியாத நிலையை உருவாக்கும். வழக்கில் அறிவியல்பூர்வமான முறையில் சான்றுகளை சேகரிக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் முறையாக விசாரணை நடத்த அவகாசம் வழங்காமல் அழுத்தம் தருவது விசாரணை சரியான பாதையில் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தும்.

இதையும் படிக்க :  “கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் உள்ளது”!. செல்லூர் ராஜு விமர்சனம்!

வழக்கு விசாரணை குறிப்புகளை போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர்.

மனுதாரர் தரப்பில், “மாணவியின் பெற்றோர் புகார் அளித்த உடனே போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் கூறப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “போலீஸார் இதுபோன்ற புகார்களை மெத்தனமாக கையாளுவது ஏற்கத்தக்கது அல்ல” என்றனர். பின்னர் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஈரானில் 24 மணி நேரத்தில் 200+ இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் தகவல்
Next Article இன்றைய ராசிபலன் உங்களுக்கு இந்த நாள் எப்படி இருக்கு ?

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.