ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்து ஒரு சவரன் ரூ. 1,15,200க்கு விற்கப்படுகிறது.
உலகளவில் தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ. 57 ஆயிரமாக இருந்த சவரன் விலை தற்போது ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதற்கு சர்வதேச அளவிலான போர் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.
கடந்த மாதத்தில் அமெரிக்க – கிரீன்லாந்து போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 5 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இனிமேல் விலையேற்றம் இதேபோன்றுதான் இருக்குமா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில், மத்திய பட்ஜெட் மற்றும் அமெரிக்க வங்கி வட்டி விகித மாற்றங்கள் காரணமாக, தங்கம் விலை சமீப நாட்களாக ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
தங்கம் விலை
நேற்று (பிப்.12) தங்கம் விலை கிராமுக்கு ரூ. 190ம் சவரனுக்கு ரூ. 1,520ம் குறைந்து ஒரு கிராம் ரூ. 14,600க்கும், சவரன் ரூ. 1,16,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் கிராமுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்ரு சவரனுக்கு ரூ. 1,600 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்துக்கு மாற்றாக இனி வெள்ளி மீதான முதலீடு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்திருந்த நிலையில் வெள்ளி விலை தங்கத்தை விட அதிக சதவீதத்தில் ஏற்றம் கண்டது. ஆனால், தங்கத்தை போன்றில்லாமல் வெள்ளியானது சோலார் பேனல்கள் உள்ளிட்ட எலெக்ட்ரிக் சாதனங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 300க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று ரூ. 20 குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 280க்கும், கிலோவுக்கு ரூ. 20 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ ரூ. 2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

