தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
கிராமுக்கு 245 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,825 ரூபாய்க்கும் சவரனுக்கு 1,960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,600-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உச்சம் அடைந்து வருகிறது.
அந்த வகையில், இன்று கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 206 ரூபாய்க்கும் கிலோவுக்கு 9,000 ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

