தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
கடந்த 8-ந்தேதி ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, நேற்று ரூ.95 ஆயிரத்தையும் எட்டியது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 860-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன் மூலம் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை மீண்டும் பதிவு செய்தது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,200-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனையாகிறது.
இரண்டாவது நாளாக வெள்ளி விலை குறைந்துள்ளது.
கிராமுக்கு மூன்று ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 203 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 2 லட்சத்துக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

