நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.320 குறைந்தது. நேற்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து காணப்பட்டாலும், பிற்பகலில் சறுக்கலை சந்தித்தது.
அந்தவகையில் நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில் நேற்று கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11,400-க்கும், ஒரு சவரன் ரூ.91,200-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.92,000 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து, ஒரு கிராம் ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

