Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, August 23
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம்: மாணிக்கம் தாகூர் கடும் எச்சரிக்கை

மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம்: மாணிக்கம் தாகூர் கடும் எச்சரிக்கை

February 15, 20262 Mins Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

எங்களுக்கு மரியாதைதான் வேண்டும்; அதை தராவிட்டால் திருப்பி அடிப்போம் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் கூடுதல் இடம், காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை திமுக வழங்க வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர் பேசுகையில், “பாஜகவை எதிர்க்கும் துணிச்சலும், தைரியமும் காங்கிரஸுக்கு மட்டும் தான் உள்ளது. அன்போடும் மரியாதையோடும் எங்களை நடத்தினால் நாங்களும் அப்படி இருப்போம். மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம். சிறுமைப்படுத்தி பேசினால் அதே பாணியில் பதிலடி கொடுப்பவன்தான் காங்கிரஸ் காரன்.

தமிழகத்தில் 2016 முதல் திமுகவுடன் காங்கிரஸின் கூட்டணி தொடர்கிறது. இந்த கூட்டணி பல வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால், திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 70 நாட்களாக நாம் காத்திருக்கிறோம். நாம் தோழமைக்கு மரியாதை கொடுக்கிறோம். அதை போலவே நாமும் எதிர்பார்க்கிறோம். காங்கிரஸ் கட்சி கப்பலை போல மிகப்பெரிய கட்சி. நான் கேட்பது மரியாதையும், அன்பும் மட்டும்தான்.

இதையும் படிக்க :  ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் - அமைச்சர் சக்கரபாணி அதிரடி தகவல் !

திமுகவின் மதுரை மாவட்ட செயலாளர் தளபதி, காங்கிரஸ் கட்சி குறித்து பேசும்போது வருத்தமாக இருக்கிறது. கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் வரட்டும். வராவிட்டால் போகட்டும் என ஒரு அமைச்சர் கூறுகிறார். இப்படி பேசுவது வலியை தருகிறது. நீங்கள் செய்த தவறுக்காக பழியை சுமந்தவர்கள் நாங்கள். ராகுல் காந்திக்கு திமுக தலைமை கொடுக்கும் முக்கியத்துவத்தை, காங்கிரஸில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம்.

நான் மீண்டும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. நாங்கள் எதற்கும் கமிஷன் கேட்டதில்லை. நாங்கள் காமராஜர், கக்கன் வழியில் வந்தவர்கள். காங்கிரஸ் கட்சியின் லட்சியமே மதுரை வடக்கு தொகுதி தான். அந்த தொகுதி நமக்கு நிச்சயமாக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் கூறியிருக்கிறேன்.

எங்களிடம் குறைவான ஆட்கள் இருக்கலாம். பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எங்கள் ஆதரவு இல்லாமல் நீங்கள் (திமுக) அரியணை ஏறியிருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்” என மாணிக்கம் தாகூர் பேசினார்.

இதையும் படிக்க :  சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - 3 அறைகள் தரைமட்டம்

வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கடந்த சில வாரங்களாக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேசி வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணி தொடர்பாகவோ, ஆட்சியில் பங்கு தொடர்பாகவோ நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என காங்கிரஸ் தலைமை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அதை உதாசீனப்படுத்தும் வகையில் தினமும் கூட்டணி தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்து வருகிறார்.

வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் எம்எல்ஏக்கள் (ராஜேஷ் குமாரை தவிர) யாரும் பொதுவெளியில் ஆட்சியில் பங்கு என கோரிக்கையை எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநடிகர் விஜய் வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும்: நடிகர் சசிகுமார்
Next Article மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,897 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,150 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,091 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,897 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,150 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,091 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.