நேற்று ஒரே நாளில் மட்டுமே தங்கம் விலை 3 முறை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தங்கம் விலை எதிர்பாராத விதமாக நேற்று ஒரே நாளில் மட்டுமே மூன்று முறை அதிரடி மாற்றத்தைச் சந்தித்துள்ளது.
காலையில் தங்கம் விலை சவரனுக்கு 5,360 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் சவரனுக்கு மேலும் 2,240 ரூபாய் என 7,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு கிராம் 12,670 ரூபாயாக சரிந்தது பொதுமக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், மாலையில் மூன்றாவது முறையாக விலையில் மாற்றம் ஏற்பட்டு தங்கம் விலை குறைந்த வேகத்தில் அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 5,360 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,06,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், கிராமுக்கு ரூ.670 உயர்ந்து, ஒரு கிராம் 13,340-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.340 குறைந்து ஒரு கிராம் ரூ.13,000க்கும், சவரனுக்கு ரூ.2,720 குறைந்து ஒரு சவரன் ரூ.104,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.240க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

