கண்ணாடி பார்க்காத முகம், விரல்களில் மோதிரமோ, கையில் கடிகாரமோ இல்லாத எளிமையான தோற்றம், தன் சொற்களால் தமிழினத்தையே கட்டிப்போட்ட மாபெரும் தலைவர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் இன்று.
தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், யாருக்கும் எஜமானாக இல்லாமல், அடிமையாகவும் இல்லாமல், யாரையும் சுரண்டாமல், யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே தன்னுடைய லட்சியமாக கொண்டு வாழ்ந்தவர்.
இன்றைய தினத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களை போற்றி வணங்குவோம்! என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

