பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி!
மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளையொட்டி, ஸ்ரீ லலிதாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில், சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமைத் துவக்கி வைத்தேன்.
பொது மக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நமது பாஜக காரியகர்த்தாக்கள், பொதுமக்கள் நலனைக் காக்க, மக்களை இந்த மருத்துவ முகாமில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
அப்போது, தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் திரு. சக்கரவர்த்தி அவர்களும், மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் திருமதி. லதா அவர்களும் உடன் இருந்தனர்.
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

