Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, June 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருகிறது -பிரதமர் நரேந்திர மோடி

ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருகிறது -பிரதமர் நரேந்திர மோடி

September 25, 20252 Mins Read65 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மக்களை கொள்ளையடித்தும், ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டும் காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருகிறது,” என பிரதமர் மோடி பேசினார்.

ராஜஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த திட்டங்களையும் துவக்கி வைத்தார். 3 வந்தே பாரத் ரயில்களை துவக்கி வைத்தார். அணுமின் நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: நவராத்திரி அன்று 9 வகையான சக்திகளை நாம் வணங்குகிறோம். ராஜஸ்தானில் இருந்து எரிசக்தி துறையில் இந்தியாவின் வலிமைக்கு ஒரு புதிய சகாப்தம் எழுதப்படுகிறது.

90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய மின்திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

21ம் நூற்றாண்டில் வேகமாக முன்னேற விரும்பும் எந்தவொரு நாடும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மின்சாரத்துக்கு காங்கிரஸ் எப்போதும் முக்கியத்துவம் அளித்தது கிடையாது.

இதையும் படிக்க :  ஸ்ரீசைலத்தில் ஸ்ரீ பிரம்மாரம்ப மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்

2014 ல் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்த போது, 2.5 கோடி வீடுகள் மின்சார வசதி இல்லாமல் இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகள் கடந்தும் 18 ஆயிரம் கிராமங்களில் மின்கம்பங்கள் இல்லை.

பெரிய நகரங்கள் நீண்ட நேரம் மின்சார தடையை சந்தித்து வந்தன. கிராமங்களில் 4-5 மணி நேரம் மின்சாரம் இருந்தாலே அதனை கொண்டாடினர்.

2014 ல் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இதை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தோம். ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்கினோம்.

2.5 கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. சுத்தமான எரிசக்தியை மக்கள் இயக்கமாக மாற்ற பணியாற்றி வருகிறோம்.

மக்களை கொள்ளையடித்து, ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட காங்கிரசால் ஏற்பட்ட காயத்தை பாஜ அரசு குணப்படுத்தி வருகிறது.

இதையும் படிக்க :  கண்பார்வை, செவித்திறன் குறைபாடு; UPSC தேர்வில் 683 வது இடத்தை பிடித்துள்ள நேர்மை அதிகாரி!

காங்கிரஸ் ஆட்சியில், வினாத்தாள் கசிவுக்கு மையமாக ராஜஸ்தான் இருந்தது. ஜல்ஜீவன் இயக்கம், ஊழல் காரணமாக நிறுத்தப்பட்டது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததுடன், பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றங்கள் மற்றும் சட்டவிரோத மதுபான தொழில் வளர்ந்தது.

ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததும், நாங்கள் சட்டம் ஒழுங்கை பலப்படுத்தினோம். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினோம்.

GST சேமிப்பு திருவிழாவை ஒட்டு மொத்த தேசமும் கொண்டாடி வருகிறது. தினசரி பயன்படுத்தும் பொருட்கள் விலை குறைந்துள்ளன.

ஆதிவாசி சமூகத்தினரை காங்கிரஸ் எப்போதும் புறக்கணித்தது. அவர்களின் தேவைகளை அக்கட்சி புரிந்து கொண்டது கிடையாது.

ஆனால் பாஜக அரசு அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு என தனி இலாகாவை உருவாக்கினோம்.

வாஜ்பாய் ஆட்சியில் பழங்குடியினருக்கு என முதல்முறையாக தனி இலாகா உருவாக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Congress Fails india narendra modi rajasthan
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇந்திய விமானப்படைக்கு 97 இலகு ரக தேஜஸ் போர் விமானங்கள் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
Next Article வேலூர் குடியாத்தம் குழந்தை கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,676 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,070 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,676 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,070 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.