Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»எப்ஸ்டீன் விவகாரம் எதிரொலி – இந்திய ஏஐ உச்சி மாநாட்டு உரையை தவிர்த்த பில் கேட்ஸ்

எப்ஸ்டீன் விவகாரம் எதிரொலி – இந்திய ஏஐ உச்சி மாநாட்டு உரையை தவிர்த்த பில் கேட்ஸ்

February 19, 20262 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்தியாவில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தாக்க உச்சி மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்த இருந்த மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அதனை ரத்து செய்துள்ளார்.

இது தொடர்பாக கேட்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஏஐ உச்சி மாநாட்டின் முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்துவதற்காக பில் கேட்ஸ் தனது முக்கிய உரையை நிகழ்த்த மாட்டார். மிகவும் கவனமாக பரிசீலித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு இலக்குகளை முன்னேற்றுவதற்கான எங்கள் பணிகளை மேற்கொள்ள கேட்ஸ் அறக்கட்டளை முழுமையாக உறுதிபூண்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், கடந்த 16-ம் தேதி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சிமாநாடு தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில், 110க்கும் மேற்பட்ட நாடுகள், 30 சர்வதேச நிறுவனங்கள், 45 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்த இருந்தார். இந்நிலையில், அவர் தனது உரையை ரத்து செய்துள்ளார். அமெரிக்​காவை சேர்ந்​தவரும் நிதி ஆலோ​சகரு​மான மறைந்த ஜெப்ரி எப்​ஸ்​டீன் உடனான பில் கேட்ஸ்-ன் நட்புறவு தொடர்பான கோப்புகள் வெளிவந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: விமானப் போக்குவரத்து நிறுத்தம்

அமெரிக்காவில் சமீபத்​தில் கொண்​டு​வரப்​பட்ட வெளிப்​படைத்​தன்மை சட்​டத்​தின் கீழ் ஜெப்ரி எப்​ஸ்​டீன் வழக்​கின் விசா​ரணை ஆவணங்​களை, அந்​நாட்டு நீதித் துறை கடந்த 19-ம் தேதி முதல் வெளி​யிடத் தொடங்​கியது. இதையடுத்​து, கடந்த சில நாட்​களாக ஆயிரக்​கணக்​கான புகைப்​படங்​கள், மின்​னஞ்​சல்​கள் மற்​றும் விசா​ரணை அறிக்​கைகள் பொது​வெளி​யில் வெளி​யிடப்​பட்டு வரு​கின்​றன. இந்த ஆவணத் தொகுப்பில், பல முக்கிய பிரமுகர்களுக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான மின்னஞ்சல்கள் இடம்பெற்றிருந்தன.

அந்த ஆவணங்களில் இருந்த ஒரு மின்னஞ்சலில், பில் கேட்ஸ் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் ஈடுபட்டதாக எப்ஸ்டீன் குற்றம் சாட்டியிருந்தார். பில் கேட்ஸுடனான தனது உறவு குறித்த எப்ஸ்டீன் கோப்புகளில், “ரஷ்யப் பெண்களுடனான பாலியல் உறவின் விளைவுகளைச் சமாளிக்க பில் கேட்ஸுக்கு மருந்துகளைப் பெற்றுத் தருவது முதல், திருமணமான பெண்களுடன் அவர் சட்டவிரோதமாகச் சந்திப்புகளை நடத்துவதற்கு வசதி செய்து கொடுப்பது வரை இருந்தது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க :  ‘சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்!’ - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

இந்த சூழலில் 9நியூஸ் ஆஸ்திரேலியா செய்தி நிறுவனத்துக்கு பில்கேட்ஸ் அளித்த நேர்காணலில், “எப்ஸ்டீனுடன் நான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் வருந்துகிறேன், அதற்காக மன்னிப்பு கோருகிறேன். இதுபோன்ற மின்னஞ்சல் ஒருபோதும் எனக்கு அனுப்பப்படவில்லை. அந்த மின்னஞ்சல் பொய்யானது. அப்போது அவருடைய எண்ணம் என்னவாக இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஏதேனும் ஒரு வகையில் என்னை தாக்க முயற்சித்தாரா எனத் தெரியவில்லை.

நான் 2011-ல் எப்ஸ்டீனைச் சந்தித்தேன். மூன்று ஆண்டுகளில் அவருடன் பலமுறை இரவு விருந்துகளில் கலந்துகொண்டேன். ஆனால் அவரது கரீபியன் தீவுக்குச் சென்றதில்லை. பெண்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. அவர் பல பணக்காரர்களைத் தெரிந்தவர் என்பதால், அவர்களிடம் உலக சுகாதாரத்திற்கு நிதியைப் பெற தூண்ட முடியும் என்று நினைத்தேன். ஆனால் அது ஒரு பயனற்ற முயற்சி என்பது பின்புதான் தெரிந்தது” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“அதிமுக சாதனை திட்டங்கள் மீது சவாரி செய்யும் திமுக தோல்வி அடைய வாழ்த்துகள்” – இபிஎஸ்
Next Article தமிழகத்தின் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவையில் காலியாகும் 37 இடங்களுக்கு மார்ச் 16-ல் தேர்தல்

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.