பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் அனைத்து குடும்பத்திற்கும் மாதமாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பக்வந்த் மான் அறிவித்துள்ளளார்.
இலவச மின்சாரம்
சென்ற மாதம் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஆம் ஆத்தி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பக்வந்த் மான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு குடும்பத்திற்கு மாதமாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமா வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
இதற்கிடையே ஆட்சிபொறுப்பேற்று ஒரு மாதம் ஆன நிலையில் பக்வந்த் மான், ஆம் ஆத்தி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேச டெல்லி சென்றார். அதன்பின்பு ஏப்ரல் 16-இல் மக்களுக்கு மிகப்பெரிய அறிவிப்பு உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி அனைத்து குடும்பத்திற்கும் வரும் ஜூலை 1 -ஆம் தேதி முதல் மாதமாதம் இலவசமாக 300 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். பஞ்சாபில், வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் கூறியது:
“வரும் ஜூலை 1ம் தேதி முதல், பஞ்சாபில் அனைத்து குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். முன்னால் சுதந்திர போராட்ட வீரர்கள் குடும்பத்தினர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் மட்டும் 200 யூனிட் இலவச மின்சாரம் இதுவரை பெற்றுவந்தனர். தற்போது அவர்களும் 300 யூனிட் இலவச மின்சாரம் பெற வழிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 டிச.31 வரை 2 கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தியவர்களின் கட்டணங்களை மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவது தொடரும்”. இவ்வாறு அவர் கூறினார்.