Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»வார பலன்கள் @ பிப்.26 – மார்ச் 4

வார பலன்கள் @ பிப்.26 – மார்ச் 4

February 26, 202615 Mins Read27 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்:
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) – பஞ்சம ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு செயல்படுத்துவது வளர்ச்சிக்கு உதவும். வாடிக்கையாளர்களிடம் சாதூரியமாக பேச வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாக பேசுவது நல்லது. பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும்.

அஸ்வினி: இந்த வாரம் நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேன்மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் நிலவினாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

பரணி: இந்த வாரம் மாணவர்கள் கல்வியில் பல சாதனைகளைப் படைப்பார்கள். அரசு வழியில் பல உதவிகளும் தேடி வரும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பெருகும். பொருளாதாரமும் மேம்படும். சர்ப்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் அம்மனை வழிபடுவது உத்தமம்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவுகள், தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றால் மன நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலைகளே நிலவும். நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். பண விஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது உத்தமம்.

பரிகாரம்: முன்னோர்களை தினமும் வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் சுமூக முடிவு ஏற்படும். காரிய தடைகள் நீங்கும்.

ரிஷபம்:
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) – சுக ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் சுபச் செலவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை.

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மன கவலை ஏற்படலாம். பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்ய போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கலைத்துறையினருக்கு லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள்.

தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக நடக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அரசியல்வதிகள் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி கிடைக்கும். தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம். சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் திருமண சுப காரிய முயற்சிகளிலும் எதிர்பார்த்த சாதகப் பலனை அடைவதில் காலதாமதம் உண்டாகும். உடல் நிலையும் சிறப்பாக அமையும் என்று கூற முடியாது. உத்தியோகஸ்தர்களும் அடிக்கடி விடுப்பு எடுக்கக்கூடிய சூழ்நிலைகளுக்கு ஆளாவார்கள்.

ரோகிணி: இந்த வாரம் எதிர்பாராத இடமாற்றங்கள் வீணான அலைச்சல்களை ஏற்படுத்திவிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் தொழிலை அபிவிருத்திச் செய்ய முடியாத நிலைகள் ஏற்படும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் மாணவர்கள் கண்டிப்பாக கல்வியில் அதிக கவனம் செலுத்துவதே நல்லது. தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்த்தால் ஓரளவுக்கு முன்னேறமுடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.

பரிகாரம்: சிவன் கோவிலில் இருக்கும் துர்க்கை அம்மனை பூஜித்து வணங்கி வர காரியங்கள் சாதகமாக முடியும். கடன் பிரச்சனை தீரும்.

மிதுனம்:
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சந்திரன், குரு(வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் எல்லாவிதமான முன்னேற்றத்தையும் தரும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பண வரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு மனக் குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு பண வரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.

காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். நெருங்கியவர்களைச் சற்று அனுசரித்துச் சென்றால் அனுகூலமான பலனை அடைவீர்கள்.

திருவாதிரை: இந்த வாரம் கொடுக்கல்-வாங்கலில் மட்டும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைச் சிறிது காலத்திற்குத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உதவிகள் கிடைத்தாலும் பொறுப்புகளும் சற்று அதிகரிக்கவே செய்யும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் திருமண சுப காரிய முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சாதகமான நற்பலனைப் பெறுவார்கள். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப் பெற்று தொழிலை அபிவிருத்திச் செய்ய முடியும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடி வந்தாலும் பண வரவில் சில தடைகளும் நிலவும்.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி தீபம் ஏற்றி வணங்க காரிய தடை நீங்கும்.

கடகம்:
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் – அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) என கிரக நிலைகள் உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பண வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

கலைத் துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல் மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாவதால் ஏற்றமிகு பலனைப் பெறுவீர்கள். விநாயகர், துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

பூசம்: இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமைந்து பலமும், வளமும் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக அமைவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

ஆயில்யம்: இந்த வாரம் கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமான பலனை அடைவார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலை நல்லமுறையில் அபிவிருத்திச் செய்ய முடியும்.

பரிகாரம்: காஞ்சி காமாட்சியை பூஜித்து வணங்கி வர மன குழப்பம் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.

சிம்மம்:
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது – களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் – லாப ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) என கிரக நிலைகள் உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமையை அதிகமாகும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆர்டர்கள் பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீரும்.

இதையும் படிக்க :  உலகை நிலைநிறுத்துவதற்கு ஹிந்து சமூகம் மையமாக உள்ளது - RSS தலைவர் மோகன் பகவத்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். பெண்களுக்கு காரியங்களில் இருந்த தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும்.

கலைத் துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தேவையான பொருள்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும்.

மகம்: இந்த வாரம் பெரிய ஆர்டர்களும் கிடைக்கப்பெற்று உங்களின் தகுதியும், தரமும் உயரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்த முடியும். பெரிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் உங்களின் லாபத்தை அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் உயரும்.

பூரம்: இந்த வாரம் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். சர்ப்பசாந்தி செய்வது, சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் ஏற்படும். சுக வாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். பண வரவுகளும் சுமாராகவே இருக்கும்.

பரிகாரம்: நந்தீஸ்வரரையும், சிவனையும் வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். மனக் கவலை அகலும்.

கன்னி:
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் நிம்மதியும், சுகமும் அதிகமாகும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்தி சாதூரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

வீண் பழி ஏற்படாமல் தடுக்கப்படும். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு மற்றவர்கள் உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விவகாரங்கள் வரலாம். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கணவன்- மனைவிக்கு இடையே ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்கள் மற்றும் நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் சில நேரங்களில் உங்களுக்கே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

அஸ்தம்: இந்த வாரம் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்னே அனுகூலப் பலனை அடைய முடியும். எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். பயணங்களால் அனுகூலம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப் பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப் பளு குறையும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை பூஜித்து வணங்கி வர குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும்.

துலாம்:
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- பஞ்சம ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) – லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் குறித்த காலத்தில் வெற்றி பெறும். உடல் நலம் சீராகும். மனம் ஒருநிலைப்படும். பண வரத்தை தரும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் மற்றவர்கள் மூலம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பண வரத்து குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. கூடுதல் உழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருந்த வீண் குழப்பம் நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடப்பது நன்மை தரும். பெண்களுக்கு கவுரவம் அந்தஸ்து உயரும். கலைத்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பண வரத்து அதிகரிக்கும். அரசியல்வாதிகள் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. மேலிடத்திற்கு நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.மாணவர்களுக்கு கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் பண வரவுகளும் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கடன்களும் படிப்படியாகக் குறையும்.

சுவாதி: இந்த வாரம் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் முடிந்த வரை பெரிய தொகையைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் அடிக்கடி உடல் நிலை பாதிப்புகளை எதிர்கொள்வார்கள். தூக்கமின்மை, உடல் நிலையில் சோர்வு, ஞாபக மறதி, மந்தமான நிலைகள் ஏற்படும்.

பரிகாரம்: குல தெய்வத்தை பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன வருத்தம் நீங்கும்.

விருச்சிகம்:
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் மனோதைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். கடன் பிரச்சனை தீரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும்.

கலைத் துறையினருக்கு நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சுத் திறமை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும். பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திறமை வெளிப்படும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் மன உளைச்சல்கள் ஏற்படாமல் இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

அனுஷம்: இந்த வாரம் குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகி ஒற்றுமைக் குறைவுகளை ஏற்படுத்தும். சுப காரிய முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் கைகூடும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

கேட்டை: இந்த வாரம் உற்றார்- உறவினர்களின் வருகையால் சில மன சஞ்சலங்கள் உண்டாகும். முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். முன் கோபத்தைக் குறைத்துக்கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது.

பரிகாரம்: செவ்வாய் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபட மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தனுசு:
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் நீங்கும். சூரியன் சஞ்சாரத்தால் பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்ம சிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

இதையும் படிக்க :  இன்றைய ராசிபலன் @ 27 மார்ச் 2026

அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக் கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகள் பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். மன உறுதி அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.

மூலம்: இந்த வாரம் கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் எதிர்பார்க்கும் லாபத்தை அடைய முடியாது. கொடுக்கல்-வாங்கலிலும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகும். கடன் தொகைகளை வசூலிப்பதில் தடைகள் உண்டாகும். வம்பு வழக்குகள் சாதகமாக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

பூராடம்: இந்த வாரம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கையில் இருக்கும் ஆர்டர்களைக் கூட முடித்துக் கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். அரசு வழிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல், டென்ஷனைக் குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் உழைப்பிற்கான முழுப்பலனை அடைய முடியும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

பரிகாரம்: சித்தர்களை வியாழக் கிழமையில் வணங்கி வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

மகரம்:
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) – அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் மன குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும்.

கலைத் துறையினருக்கு உயர்நிலையில் உள்ளவர்களுடன் மன வருத்தம் ஏற்படும் படியான சூழ்நிலை வரும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். அரசியல்வாதிகளின் திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். விரும்பத்தகாத வாக்கு வாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் சில நேரங்களில் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்துவதுடன் குடும்பத்தைவிட்டும் பிரிய நேரிடும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

திருவோணம்: இந்த வாரம் புதிய வேலை வாய்ப்புகள் தகுதிக்கு ஏற்றபடி அமையும். பெண்கள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நீடிக்கும். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள், வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் அசையா சொத்துகளாலும், வண்டி, வாகனங்களாலும் வீண் செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாகவே இருக்கும்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன திருப்தி ஏற்படும்.

கும்பம்:
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) – களத்திர ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் பண வரத்து அதிகரிக்கும். சுபச் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

கலைத் துறையினருக்கு நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதை கழிப்பீர்கள். தொழில் சிறப்பான முன்னேற்றம் பெறும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும்.

சதயம்: இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு தொழிலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்குத் தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் தொழிலில் சுணக்கம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர்வரத்து சிறப்பாகவே இருக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கிடுக்குப் பிடியான சூழ்நிலைகள் உண்டாகும். கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வர வேண்டிய பணத் தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.

பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட உடல் ஆரோக்கியம் உண்டாகும். கஷ்டங்கள் குறையும்.

மீனம்:
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் வீண் மன குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச் சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். மன வருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். கலைத் துறையினருக்கு பாராட்டுகள் வரும்.

வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். நண்பர்களிடையே உறவு நிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எந்த விஷயத்திலும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் சக கலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். மாணவ-மாணவியர் கல்வியில் நல்ல முன்னேற்றமுடன் எதிர்பார்த்த மதிப் பெண்ணைப் பெற முடியும். அடிக்கடி ஞாபக மறதி ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. தேவையற்ற பொழுது போக்குகளையும், நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பது நல்லது.

உத்திரட்டாதி: இந்த வாரம் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தைக் குறைத்துக் கொள்வது சிறப்பு. இக்காலங்களில் உடல் நிலையில் சிறு சிறு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் நிம்மதியும், ஒற்றுமையும் உண்டாகும்.

ரேவதி: இந்த வாரம் பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி முல்லை மலர் சாற்றி வழிபடுவது செல்வ சேர்க்கையை தரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதென் ஆப்​பிரிக்கா​வுடன் இன்று பலப்பரீட்சை: மே.இ.தீவுகளின் அதிரடி எடுபடுமா?
Next Article ஜோதிட நாள்காட்டி 26.02.2026 | மாசி 14

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.