ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ம் ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 14 பேருக்கு ஜாமீன் வழங்கி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
14 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையுடன் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி கே.ராஜசேகர் முன்பு நடைபெற்றது. இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, 14 பேரில் அஞ்சலை மற்றும் பொற்கொடி தவிர்த்து 12 பேரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். ஜாமீன் ரத்து செய்யப்பட்ட அஸ்வத்தாமன், ஹரிஹரன், பிரதீப் உள்ளிட்டோர் மார்ச் 6-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

