Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»உயர்நீதிமன்றத்தால் பணித்தடை விதிக்கப்பட்ட ஊழல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? ஊழலும், மோசடியும் தான் திமுகவின் இரு கண்கள்!

உயர்நீதிமன்றத்தால் பணித்தடை விதிக்கப்பட்ட ஊழல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? ஊழலும், மோசடியும் தான் திமுகவின் இரு கண்கள்!

February 27, 20262 Mins Read26 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உயர்நீதிமன்றத்தால் பணித்தடை விதிக்கப்பட்ட ஊழல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? ஊழலும், மோசடியும் தான் திமுகவின் இரு கண்கள்! என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14.20 கி.மீ தொலைவுக்கு நான்கு வழி உயர்மட்டச் சாலை அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை திமுக அரசும், அதன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் எவ்வாறு ஏமாற்றி வருகிறார்கள் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும்.

திருவான்மியூருக்கும், உத்தண்டிக்கும் இடையே ரூ.2100 கோடியில் உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த திசம்பர் 24&ஆம் நாள் ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்தப் பணியை கே.என்.ஆர் நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகையை விட ரூ.700 கோடி குறைவான செலவில் முடித்துத் தருவதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திலிப் பில்ட்காப் என்ற நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்த நிலையில், அந்த நிறுவனத்தை நிராகரித்து விட்ட திமுக அரசு, கே.என்.ஆர் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

இதையும் படிக்க :  மேகதாது அணை குறித்து கட்டாயம் விவாதிப்போம் - ஆணைய தலைவர் திட்டவட்டம் !

இதை எதிர்த்து திலிப் பில்ட்காப் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான பணி ஆணை வழங்கத் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை நீக்க திமுக அரசு பலமுறை முயன்றும் கூட அதை நீதிமன்றம் ஏற்றுக்கொ்ள்ளவில்லை.

கடைசியாக இந்த வழக்கு கடந்த 16-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது கூட, ஒப்பந்தப்புள்ளி தொடர்பான அரசின் முடிவை எதிர்த்து திலிப் பில்ட்காப் 5 நாள்களில் அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அதன் மீது அடுத்த 10 நாள்களில் அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு முடிவெடுக்கும் வரை பணி ஆணை வழங்கப்படக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதன்படி எந்த முடிவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இத்தகைய சூழலில் பாலத்திற்கான பணிகளை மேற்கொள்ள முடியாது எனும் போது அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது என்பது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். திமுகவின் வழக்கமே ஊழல் செய்வதும், சாத்தியமற்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி மக்களை ஏமாற்றுவதும் தான். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார். ஆனால், இவற்றில் ஒரே ஒரு திட்டம் கூட திமுக ஆட்சியால் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை.

இதையும் படிக்க :  6 வயது சிறுமியை கரும்பால் அடித்தே கொன்ற தாய் ! திருவண்ணாமலை நடந்த கொடூரம் !

2011-ஆம் திமுக ஆட்சியின் முடிவில் கடலூர், கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 நகரங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு அப்போதைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார். ஆனால், அந்தத் திட்டங்களுக்கு ஒரே ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை. அதேபோல் தான் இப்போதும் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்படும் பணிகளுக்கும் ஒரே ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படப் போவதில்லை.

ஊழலையும், மக்களை ஏமாற்றுவதையும் இரு கண்களாகக் கொண்ட திமுக அரசின் கபட நாடகங்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்வு: தனியார் நிறுவன கொள்ளைக்கு துணை போகும் ஊழல்- கமிஷன் திமுக அரசு!
Next Article திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,557 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,557 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.