Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 4,010 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க மறுப்பது நியாயமல்ல: அன்புமணி

போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 4,010 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க மறுப்பது நியாயமல்ல: அன்புமணி

February 22, 20262 Mins Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சுகாதார ஆய்வாளர்கள், கூட்டுறவு உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 4,010 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் சார்பில் 1429 சுகாதார ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரி பார்ப்பும் முடிவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. பல ஆண்டு காத்திருப்புக்கு பின்னர் அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் கூட அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க மறுப்பது நியாயமல்ல.

தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறைக்கு 1429 சுகாதார ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி வெளியிடப்பட்டு, அதனடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த டிசம்பர் 7-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, அடுத்த சில வாரங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டன. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து கடந்த 13-ம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்படவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டது.

இதையும் படிக்க :  “நானும், அண்ணாமலையும் அண்ணன் தம்பி மாதிரி” - நயினார் நாகேந்திரன்

இதற்குக் காரணம் சுகாதார ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள்தான் என்று கூறப்பட்டது. ஆனாலும், விசாரணையில் அது உண்மையில்லை என்று தெரியவந்ததையடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு முன்பு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்காமல் தற்போது தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்கள், தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என புதிய வழக்கு தொடர்திருப்பதால் நியமன ஆணை வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதேபோல், கூட்டுறவுத் துறையில் உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் 2581 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் கடந்த அக்டோபர் 5, 11 ஆகிய தேதிகளிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 15, 21 ஆகிய தேதிகளிலும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. அதற்கும் நீதிமன்ற வழக்குகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

சுகாதார ஆய்வாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் ஏற்கனவே கரோனா காலத்திற்கு சுகாதார ஆய்வாளர்களாக தற்காலிகமாக பணியாற்றி, அதன் பின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் தற்காலிகமாக பணியாற்றி வருபவர்கள் ஆவர். தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் சுகாதார ஆய்வாளர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கான ஆள்தேர்வு நடைபெறுவதால் அதை வராது வந்த வாய்ப்பாக அவர்கள் கருதுகின்றனர். அந்த வாய்ப்பை அவர்களிடமிருந்து பறித்து விடக்கூடாது.

இதையும் படிக்க :  விவசாய தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்புகள்

அதேபோல், கூட்டுறவுத்துறை பணிக்கான தேர்வு எழுதியவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் பல ஆண்டுகளாக இந்தப் பணிக்கு காத்திருப்பவர்கள் ஆவர். அடுத்த சில நாள்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், அறிவிக்கை வெளியானால், இந்த நியமனங்களை செய்ய முடியாமல் போய்விடும். எனவே, நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி அவர்களுக்கு கைக்குக் கிடைத்ததை வாய்க்கு கிடைக்காமல் செய்து விடக் கூடாது.

தமிழக அரசு உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி சுகாதார ஆய்வாளர்கள், கூட்டுறவுத் துறை உதவியாளர்கள் பணிக்கு தகுதியானவர்களை நியமிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். 1429 சுகாதார ஆய்வாளர்கள், 2581 கூட்டுறவுத்துறை உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் என 4,010 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமாசி மகத்தையொட்டி கும்பகோணம் 3 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம்: மார்ச் 2-ல் 3 கோயில்களில் தேரோட்டம்
Next Article பாக். vs நியூஸி. ஆட்டம் மழையால் ரத்து | T20 WC 2026

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.