அண்ணாவின் கொள்கையில் பிறந்து, புரட்சித் தலைவரின் துணிச்சலில் வளர்ந்து, புரட்சித் தலைவி அம்மாவின் அர்ப்பணிப்பில் பிரகாசித்து மக்களின் இதயத்தில் வெற்றிக்கொடி நாட்டி, புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் கடின உழைப்பால் தழைத்து நிற்கும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 54-ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக செங்கலப்படு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் அவர்களின் ஏற்பாட்டில் இன்று 17.10.2025 திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக அமைப்பு செயலாளர் திரு N.முருகுமாரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் கழக இளம் பேச்சாளர் திரு R.டெல்வின் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பொன்விழா கண்ட மாபெரும் இயக்கத்தின் சாதனைகளை விளக்கியம், விடியா திமுக ஆட்சியின் அவல நிலையை எடுத்துரைத்தும் சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.